“பாபர் விக்கெட்டை தெரியாம எடுக்கல.. அது நல்ல பந்துதான்.. நான் மோசமான பவுலர் கிடையாது!” – சிராஜ் அதிரடி பேட்டி!

0
6747
Siraj

நேற்று இந்திய அணி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது!

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான அணி 191 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய தரப்பில் சர்துல் தாக்கூர் தவிர மற்ற ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

முகமது சிராஜ் அப்துல்லா ஷபிக் விக்கெட்டை எல்பிடபிள்யு மூலம் கைப்பற்றி, முதல் திருப்புமுனையை இந்திய அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். இதற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்பு ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் மிகச் சிறப்பாக ரன் சேர்த்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தான் அணியை முன்னோக்கி கொண்டு சென்றார்கள். பாபர் அசாம் அரைசதம் அடித்து களத்தில் நின்றார்.

இந்த நிலையில் இரண்டாவது ஸ்பெல்லுக்கு வந்த முகமது சிராஜ் குட் லென்த்தில் ஆப் ஸ்டெம்பை தட்டும் விதமாக, சிறப்பான பந்து ஒன்றை வீசி பாபர் அசாம் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அங்கிருந்து மேற்கொண்டு 31 ரன்கள் மட்டும் சேர்த்து பாகிஸ்தான அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆனாலும் 8 ஓவர்களில் 50 ரன்கள் அவர் கொடுத்திருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய முகமது சிராஜ் “உங்களுக்கு ஒருநாள் சரியாக அமையவில்லை என்பதற்காக நீங்கள் மோசமான பந்துவீச்சாளராக ஆகிவிடமுடியாது. எனக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறது. மேலும் நான் இங்கு பந்து வீசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஒரு மோசமான பந்துவீச்சாளர் கிடையாது.

அந்த நேரத்தில் பாகிஸ்தான் நன்றாக விளையாடியது. நல்ல பார்ட்னர்ஷிப் பெற்றார்கள். இதற்குப் பிறகு பாபருக்கு நான் வீசிய வந்து தாழ்வாக சென்ற பந்து கிடையாது. அது சரியான பவுன்சில் இருந்தது. சற்று ஸ்கிட்டாகி ஸ்டெம்பை அடித்தது.

நாங்கள் ஒருவரை ஒருவர் ஆதரிக்கிறோம். நான் வந்த நிலையை கருத்தில் கொண்டு, நான் ஒருபோதும் உலகக் கோப்பையை விளையாடுவேன் என்று கனவு கண்டதில்லை. ஆனால் இப்போது நான் அதை அனுபவித்து விளையாடிய வருகிறேன்.

ரோஹித் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு ஜாம்பவான். நாங்கள் பாகிஸ்தான் அணி உடன் ஆன போட்டியை ஒரு போட்டியாக மட்டுமே எடுத்துக் கொண்டோம். பாகிஸ்தானுக்கு எதிராக என்பதனால் நாங்கள் கூடுதலாக எதையும் செய்யவில்லை. இது ஒரு உலகக் கோப்பை. நாங்கள் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக விளையாட அதற்கு ஏற்ற வகையில் மாறிக்கொள்ள வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!