சச்சின் செஞ்ச மாதிரி.. பாபர் அசாம் தனது அணிக்காக இதை நிச்சயம் செய்வார் – பாக் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை

0
195

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக செய்ததைப் போலவே பாபர் அசாமும் பாகிஸ்தான் அணிக்காக இதை செய்ய முடியும் என்று அதன் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

- Advertisement -

காயம் அடைந்த சைம் அயூப்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஏராளமான போட்டிகளில் விளையாடி 100 சதங்கள் அடித்து மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறார். சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு பல போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் சச்சின் டெண்டுல்கர் அறிமுகமான புதிதில் இந்திய அணிக்காக மிடில் வரிசை ஆட்டக்காரராகவே இருந்த நிலையில் 69 போட்டிக்குப் பிறகு தொடக்க வீரராக களம் கண்டார்.

தனது அறிமுகப் போட்டியில் இருந்து 69 போட்டிகளுக்குப் பிறகு 1994 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் போது சச்சின் டெண்டுல்கர் தொடக்க வீரராக களம் கண்டார். அதற்குப் பிறகு தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்கு பலவேறு சாதனைகளை புரிந்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சைம் அயுப் காயம் காரணமாக தொடரிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை உருவாக, அவருக்கு பதிலாக பாபர் அசாம் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை

இதுகுறித்து வெளிவந்துள்ள அறிக்கையில் “சைம் காயம் அடைந்த ஒரு நாளுக்கு பிறகு அவர் குறைந்தது இரண்டு மாதங்கள் ஆவது கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாம்பியன்ஸ் ட்ராபியில் தொடக்க ஆட்டக்காரராக அவர் களம் இறங்க வாய்ப்பில்லை. டெண்டுல்கர் ஏற்கனவே நிறைய டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக இருந்ததால் அவர் தொடக்க வீரராக செய்ததைப் போலவே பாபர் அசாமும் செயல்பட முடியும்.

இதையும் படிங்க:பும்ரா ஒருவேளை இல்லனா.. இந்த 23 வயது பையன்தான் சரியான மாற்று வீரர் – கம்ரான் அக்மல் பேட்டி

இது குறித்து பாபர் அசாமிடம் பேசப்பட்ட போது அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். இது அவர்களுக்கு மிடில் வரிசையில் பரிசோதனை செய்வதற்கு வழிவகை செய்யக்கூடிய வகையில் இருக்கும்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாபர் அசாம் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கலாம். மேலும் சொந்த மண்ணில் தொடர் நடைபெற உள்ளதால் நம்பிக்கையோடு பாகிஸ்தான் அணி களமிறங்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

- Advertisement -