இப்ப கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன் பாபர் ஆஸம் – விராட் கோலி ஒளிவு மறைவற்ற பேட்டி!

0
1072
Viratkohli

கிரிக்கெட்டில் ஒவ்வொரு கட்டத்திலும் இருவரை வைத்து யார் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்கிற வாத விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும். அது எப்பொழுதும் ஓயாது. அது ஓய்ந்தால் கிரிக்கெட் நின்று விட்டது என்று அர்த்தம்.

90களின் காலகட்டத்தில் எடுத்துக் கொண்டால் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா இருவரையும் முன்வைத்து யார் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்கின்ற வாத விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து 2000ஆம் காலத்தில் விராட் கோலி மட்டும் நிலையாக இருக்க, அவருடன் ஆஸ்திரேலியாவின் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் என பலரை ஒப்பிட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபகாலமாக விராட் கோலி உடன் ஒப்பிடப்படக்கூடிய பேட்ஸ்மேனாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் இருக்கிறார். அந்த நாட்டின் ரசிகர்கள் பலரும் விராட் கோலி உடன் அவரை ஒப்பிட்டு எப்பொழுதும் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் விராட் கோலி இடம் பாபர் ஆஸம் குறித்தும், அவருடன் முதல் உரையாடல் எப்பொழுது அமைந்தது என்ன பேசப்பட்டது என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு விராட் கோலி தெளிவாக பதில் முன்வைத்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து விராட் கோலி பேசும் பொழுது ” 2019 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் மழை நேரத்தில் எங்களுடைய முதல் உரையாடல் நடந்தது.
இமாத் வாசிமை எனக்கு அண்டர் 19 விளையாடிய பொழுது தெரியும். இப்படியான நிலையில் பாபர் என்னுடன் உரையாட விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

நாங்கள் இருவரும் விளையாட்டு குறித்து நிறைய பேசினோம். அவர் முதல் சந்திப்பின்போது மிகவும் பண்போடும் மரியாதையோடும் இருந்தார். அதில் இப்பொழுது வரை எந்த மாற்றமும் கிடையாது.

அவர் தற்போது அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருப்பார். ஏனென்றால் இப்படி சொல்வது மிகவும் சரியான ஒன்றாக இருக்கும். அவர் தொடர்ந்து சீரான முறையில் விளையாடி வருகிறார்” என்று கூறியிருக்கிறார்!