“அவரைப் போல் ஆடுவதையே என்னுடைய கனவாக இருந்தது” – தனது ரோல் மாடல் பற்றி பேசிய பாபர் அசாம்

0
4439
Babar ABD

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான அணிகளுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது . இதன் முதல் டெஸ்ட் போட்டி நாளை ராவல்பிண்டியில் வைத்து நடைபெறுகிறது . 17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்று விளையாட உள்ளதால் இந்தத் தொடர் வரலாற்று சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது .

இந்த தொடருக்கு முன்பாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் தலைமையில் பாகிஸ்தான அணியின் கேப்டன் பாபர் அசாம் நேர்காணல் கண்டது அந்தப் பேட்டியில் பாபர் அசாம் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் .

- Advertisement -

அந்தப் பேட்டியில் பேசிய பாபர் ” 19 வயதுக் உட்பட்டோருக்கான போட்டிகளில் ஆடி நேரடியாக பாகிஸ்தான் தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டேன் அந்த நேரங்களில் என்னால் எதிர்பார்த்த அளவுக்கு விளையாட முடியவில்லை . அப்போது நான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு இன்னும் தயாராகவில்லை என்று எண்ணினேன் . அதன் பிறகு பாகிஸ்தான் அணையில் இருந்து சிறிது காலம் வெளியில் இருந்தேன் “,

அந்த நேரங்களில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மிகவும் உதவியாக இருந்தார் . அவர் “உன்னுடைய திறமையின் மேல் நம்பிக்கை வை, உன்னால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு நல்ல பேட்ஸ்மனாக வர முடியும் “என்று கூறினார் . அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டேன் அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி 300 ரன்களுக்கு மேல் குவித்தேன் அங்கிருந்து என்னுடைய கிரிக்கெட் பயணம் ஆரம்பமானது” என்று கூறினார் ,

மேலும் பாபரிடம் அவரின் முன்மாதிரி பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் “நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலம் முதல் தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் தான் என்னுடைய ரோல் மாடலாக இருந்தார் . சிறு வயது முதலே அவருடைய ஷாட்களை நான் பயிற்சி செய்து பார்ப்பேன் . அவரைப் போன்ற என்னுடைய ஆட்டத்திணையும் தவம் வைத்துக் கொள்ள முயற்சி செய்வேன் . அவரைப் போல் ஆடுவதையே என்னுடைய கனவாக கொண்டிருந்தேன்” என்றும் கூறினார் ,

- Advertisement -

மேலும் அவர் “எல்லா பேட்ஸ்மன்களுக்கும் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு கடினமான காலம் வரும் அதேபோன்று நானும் கடந்த சில மாதங்களாக சரியாக ஆட முடியவில்லை எனினும் என்னுடைய தவறுகளை சரி செய்து கொண்டு நடைபெற இருக்கின்ற இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்படுவேன்” என்று கூறினார்