டக் அவுட் ஆனதால் முதல் இடத்தில் இருந்து கீழிறங்கப்பட்ட பாபர் அசாம் – புதிய ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியல் வெளியீடு ; மீண்டும் மலான் முதலிடம்

0
170
David Malan and Babar Azam

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் டி20 பேட்டிங் வீரர்களுக்கான வரிசையில் மீண்டும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டேவிட் மாலன் முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை முதலாம் இடத்திலிருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாபர் அசாம் தொடர்ந்து குறைவான இரங்கலை பதிவு செய்து வந்ததால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். T-20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபாக்காம் தற்போது நடந்து வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் 0 மற்றும் 7 என்று குறைவான ஸ்கோர்களை பதிவு செய்துள்ளார். இதனால் முதலிடத்தில் நடித்து வந்த இவர் தற்போது 3-வது இடத்திற்கு சென்றுள்ளார்.

முதல் இடத்திற்கு இங்கிலாந்து அணியை சேர்ந்த டேவிட் மாலன் மீண்டும் வந்துள்ளார். பாபர் அசாம் முதல் இடத்தைப் பிடிப்பதற்கு முன்பு இவர் தான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய மற்றொரு வீரரான தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த மார்க்ரம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு பாகிஸ்தான் வீரரான முகமது ரிஸ்வான் 4-வது இடத்தில் உள்ளார்.

இந்திய வீரர்களை பொறுத்தவரை இந்திய அணியின் துவக்க வீரர் கேஎல் ராகுல் 5-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் 12 ஆவது இடத்திலும் முன்னாள் கேப்டன் கோலி 11வது இடத்திலும் உள்ளனர். டி20 போட்டிகளில் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஒரு இந்திய வீரர் கூட டாப் 10 இடத்தில் இல்லை. இலங்கையைச் சேர்ந்த ஹசரங்கா முதல் இடத்திலும் அதனைத் தொடர்ந்து ஷாம்சி, ஜாம்பா, அடில் ரஷித் மற்றும் ரஷித் கான் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் ஐந்து இடத்தைப் பிடித்த அனைத்து பந்து வீச்சாளருமே லெக் ஸ்பின்னர்கள். இந்திய அணி t20 உலகக்கோப்பைக்கு சீனியர் லெக் ஸ்பின்னரான சஹாலை புறக்கணித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

வரும் காலங்களில் அதிகமான டி20 போட்டியில் இந்திய அணிக்கு இருப்பதால் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி மீண்டும் தரவரிசையில் முன்னேறுவார்கள் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்