டிரெஸ்ஸிங் ரூமில் பாபர் அசாம் ஷாகின் அப்ரிடி வாக்குவாதம்.. ரிஸ்வான் சமாதானம்.. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பு!

0
9078
Shaheen

நடப்பு ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி இரண்டாவது சுற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியிருக்கிறது.

ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் இதுவரை மோதிக் கொண்டதில்லை என்கின்ற 39 வருட வரலாறு அப்படியே தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறாததோடு, இந்திய அணியிடம் 228 ரன்கள் என்கின்ற மோசமான தோல்வியை அடைந்தது. மேலும் அந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இடையே 233 ரன்கள் என்ற சாதனை பார்ட்னர்ஷிப் வளரவிட்டது.

இதற்கு அடுத்து இலங்கை அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில், நல்ல ரன்களை எடுத்து இருந்தும், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்படாமல் பாகிஸ்தான் அணி கோட்டை விட்டது.

- Advertisement -

மேலும் நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் திட்டங்கள் மிகவும் சுமாராக இருந்தது. இது மட்டும் இல்லாமல் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஹாரிஸ் ரவுப் மற்றும் நசீம் ஷா இருவரும் காயத்தால் விளையாட முடியாமல் போனது.

இதுவெல்லாம் சேர்ந்து பாகிஸ்தான் அணி மீதான அதிகப்படியான விமர்சனங்களை உள்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கொண்டு வந்ததோடு, பாகிஸ்தான் முன்னாள் வீரர்களிடம் இருந்தும் கொண்டு வந்திருக்கிறது.

தற்பொழுது இலங்கை அணி எதிரான போட்டிக்குப் பின்பு, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் நட்சத்திர வீரர் ஷாகின் அப்ரிடி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியே கசிந்து இருக்கிறது.

பாபர் அசாம் அணி வீரர்களிடம் யாரும் பொறுப்பை உணர்ந்து விளையாடாத காரணத்தினால், அணி தோல்வியை சந்தித்து இருக்கிறது, அணியில் யாரும் பெரிய வீரர்கள் கிடையாது என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

அப்பொழுது தலையிட்ட ஷாகின் ஷா அப்ரிடி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டவர்களை மட்டுமாவது பாராட்டு செய்யலாம் என்று பாபர் அசாமிடம் கூறியிருக்கிறார். இதற்கு பாபர் அசாம் யார் நன்றாக செயல்பட்டார்கள் என்று எனக்குத் தெரியும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்த பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறி நிலைமை மோசமாகி இருக்கிறது. இதை உணர்ந்த விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் உடனே தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி நிலைமையை சரி செய்து இருக்கிறார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அணிக்குள் சுமுகமான சூழ்நிலை இல்லை என்று பல முன்னாள் வீரர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -