“நூறு நல்லா தான் இருக்கும் தம்பி… ஆனா இதை பாருங்க ஃபர்ஸ்ட்!..”…நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டவுல் குற்றச்சாட்டு!

0
176

தற்போது பாகிஸ்தான் நாட்டில் பி.எஸ்.எல் எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகளை கொண்டு நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டிகள் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கின்றன. இன்னும் ஐந்து ஆட்டங்களே மீதி இருக்கும் நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு அணிகள் தீவிரமாக போராடி வருகின்றன.

இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் மீதி இருக்கும் இரண்டு இடங்களுக்கு நான்கு அணிகள் கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் பெஷாவர் அணியை வீழ்த்தி குவெட்டா அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பேஷாவர் அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 240 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக ஆடி டி20 கிரிக்கெட்டில் தனது எட்டாவது சதத்தை பதிவு செய்தார். அவர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 115 ரண்களை குவித்து இருந்தார். மேலும் அந்த அணிக்காக இளம் வீரர் சைம் அய்யூப் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார் . இதில் 5 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும்.

240 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய குவெட்டா அணி 18.2 ஓவர்களில் இலக்கை சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது . அந்த அணியின் ஜேசன் ராய் அபாரமாக ஆடி 63 பந்துகளில் 145 ரண்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார. இதில் 5 சிக்ஸர்களும் 20 பவுண்டரிகளும் அடங்கும் .

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சைமன் டவுல் பெஷாவர் அணியின் தோல்விக்கு கேப்டன் பாபர் அசாமின் நிதானமான ஆட்டம் தான் காரணம் குறிப்பிட்டு இருக்கிறார். இது குறித்து பேசி இருக்கும் அவர் ” 49 பந்துகளில் 89 ரன்களை எடுத்திருந்த பாபர் 60 பந்துகளில் தான் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அந்த நேரத்தில் அவர் அதிரடியாக ஆடி இருக்க வேண்டும். அணியின் கைவசம் ஏராளமான விக்கெட் இருக்கும் போது அவர் சதம் எடுக்க வேண்டும் என்று மெதுவாக ஆடியது அணியின் வெற்றியை பாதித்தது எனக் கூறினார். இன்னும் ஒரு 20 ரன்கள் அதிகம் எடுத்திருந்தால் பெஷாவர் அணி வெற்றி பெற்று இருக்கலாம் என தெரிவித்தார் சைமன் டவுல்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ஒரு வீரருக்கு சதம் என்பது முக்கியமான ஒன்றுதான் ஆனால் அணியின் வெற்றி அதைவிட முக்கியம். அதுவும் கேப்டனாக இருக்கும்போது தனது சொந்த சாதனைகளுக்கு முன்பாக அணியை நிறுத்திப் பார்க்க வேண்டும் என கூறினார். பின் வரிசையில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் இருந்தும் இறுதியில் விக்கெட் இழக்காமல் மெதுவாக ஆடியது இறுதிக்கட்டத்தில் பெஷாவர் அணியின் ரன் குவிப்பை பாதித்தது.