“முகமது ரிஸ்வான் ஷாகின் ஷா அப்ரிடி இருவரையும் ஒரு வடிவ கிரிக்கெட் போட்டியில் இருந்து நீக்க வேண்டும்” – பாபர் ஆசம் பதில்!

0
1698
Babar azam

கடந்த இரண்டு வருடங்களில் பாகிஸ்தானிய கிரிக்கெட் பெரிய அளவில் மாறி உள்ளது என்றே கூறலாம. இதற்கு மிக முக்கிய காரணம் இரண்டு; ஒன்று மற்ற பெரிய கிரிக்கெட் நாடுகள் பாகிஸ்தானிற்கு வந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு தயாராக இருக்கின்றன. மற்றொன்று உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான பாபர் ஆசமின் பேட்டிங் பங்களிப்பு!

பாகிஸ்தான் அணி வருகின்ற இருபத்தி ஏழாம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்டில் தொடங்க இருக்கும் ஆசிய கோப்பை போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாக, நெதர்லாந்து சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி வருகின்ற 16ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு பாகிஸ்தான் அணி புறப்படுமுன் பாகிஸ்தானில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

- Advertisement -

இந்த பத்திரிக்கையாளர் நிகழ்வில் பாகிஸ்தான் வீரர்களுக்கு பெரிய அளவில் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும், காரணத்தாலே இலங்கையுடனான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றதாகவும், இதை பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் உணர்ந்து இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பாபர் ” தற்போதைய பாகிஸ்தான் அணியின் வீரர்கள் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடும் அளவிற்கு உடல் தகுதியோடு இருக்கிறார்கள். இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி தோல்விக்கு இது காரணம் அல்ல.” என்று தெரிவித்தார்!

மீண்டும் தொடர்ந்த பத்திரிக்கையாளர்கள் ” பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான முகமத் ரிஸ்வான் மற்றும் சாகின் ஷா அப்ரிடி இருவரையும் இரண்டு வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாட வைப்பது சரியாக இருக்குமா என்று கேள்வி எழுப்பினார்கள். மேலும் உடற்தகுதி பாகிஸ்தான் அணியின் ஒரு பிரச்சனையாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்கள்.

- Advertisement -

இதற்கு பதிலளித்த பாபர் ” தற்போதைய பாகிஸ்தான் அணியில் உடல்தகுதி ஒரு பிரச்சனையாக இல்லை. ஒருவேளை மூன்று வடிவ போட்டிகளுக்கும் விளையாட உடற்தகுதி ஒரு பிரச்சனையாக இருந்தால், நாங்கள் எங்கள் உடற்பகுதி அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்” என்று தெரிவித்தார்.

தற்போது நெதர்லாந்து இருக்கும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட செல்ல உள்ள நிலையில், இந்த தொடரில் ஏதும் புதிய சாதனைகள் நிகழ்த்த திட்டமிட்டு உள்ளீர்களா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பாபர் ” நான் சாதனைகளை நோக்கி ஒருபோதும் விளையாடுவதில்லை. எப்பொழுதும் அணியின் வெற்றிக்காகவே விளையாடுகிறேன்” என்றும் தெரிவித்தார்!