“சச்சினை உணர வைத்தார் பாபர் ஆஸம்” – கவாஸ்கர் அதிரடியான புகழ்ச்சி!

0
1966
Sachin

நவீன கிரிக்கெட்டின் அடையாள வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். அவரது காலத்திற்குப் பிறகு அதி நவீன கிரிக்கெட் காலத்தில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் வந்தார்கள்!

அதிநவீன கிரிக்கெட் காலத்தில் பீட்டர்சன் மற்றும் ஏபி டிவிலியர்ஸ்க்கு பிறகு அவர்களது முறையில் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் கோலோச்சுவார்கள் என்று பார்த்த பொழுது, மரபு கிரிக்கெட் ஷாட்கள் விளையாடி ரன் குவிக்கும் மெஷின்களாக வந்தார்கள் விராட் கோலியும் அதற்கு அடுத்து சில வருடங்கள் கழித்து பாபர் ஆசமும்!

- Advertisement -

இந்தியாவின் விராட் கோலி மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் கோலோச்சும் அரசனாக விளங்கினார். தற்போதும் அவர் மிகச் சிறப்பான செயல் நிலையிலேயே இருக்கிறார். பாபர் ஆஸமை இவருடன் ஒப்பிடும் பொழுது டி20 கிரிக்கெட் வடிவத்தில் அதிரடியாக விளையாடுவதில் விராட்கோலி கொஞ்சம் முன்னணியில் இருப்பார்.

அதே சமயத்தில் விராட் கோலி சில ஆண்டுகளுக்கு முன் எப்படி ஓயாமல் ரன் குவித்து வந்தாரோ அப்படி இப்பொழுது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ரன் குவித்து வருகிறார். இவரை முதன் முதலில் பார்த்த பொழுது தனக்கு என்ன தோன்றியது என்று, கிரிகெட் லெஜெண்ட் பேட்ஸ்மேன் கவாஸ்கர் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறும்போது
” தென்ஆப்பிரிக்க அணியின் நோர்க்கியாவுக்கு எதிராக பாபர் விளையாடிய 2 ஷாட்களை பற்றி நான் ரமீஸ் ராஜாவிடம் கூறினேன். கராச்சி மைதானத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் அவர் வீசினார். அப்பொழுது பாபர் அந்த வேகத்தை எதிர்கொண்டு மிட் ஆன் மற்றும் மிட் விக்கெட் திசையில் பவுண்டரிகள் ஆடினார். அந்த வேகத்தைப் பயன்படுத்தி ஸ்கொயர் லெக் மற்றும் பைன் லெக் திசையில் விளையாடுவது சுலபம். ஆனால் பாபர் அடித்த அந்த இரண்டு ஷாட்களில் திசையும் அபாரமானது. அந்த ஷாட்கள் மகத்துவமான தரம் கொண்டவையாக இருந்தது ” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய கவாஸ்கர்
” நான் முதன்முதலில் சச்சின் டெண்டுல்கரை பார்த்தபொழுது, அவர் வலைப்பயிற்சியில் கபில் தேவ் மற்றும் ராஜு குல்கர்னிக்கு எதிராக பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவர் விளையாடிய விதத்தை பார்த்த பொழுது இந்தப் பையனிடம் ஏதோ இருக்கிறது என்று தோன்றியது. அதே உணர்வு பாபர் விளையாடிய அந்த இரண்டு ஷாட்களை பார்த்தபொழுது உண்டானது ” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்னும் விளக்கமாக பேசிய கவாஸ்கர் ” நான் ரமீஸ் ராஜா இருக்கும் குழுவிற்கு அனுப்பிய செய்தியில் ‘ இந்தப் பையனிடம் ஏதோ வித்தியாசமான திறமை இருக்கிறது. ஆனால் இந்தப் பையன் 60,70 ரன்கள் மட்டுமே அடிப்பதால் அது வெளியே வரவில்லை. இது சதகமாக மாறும் பொழுது அவர் பெரிய வீரராக வருவார்’ என்று கூறியிருந்தேன். இதற்கு இதற்குப் பிறகு காலம் கழித்து எனக்கு யாரோ அந்தக் குழுவில் இருந்து செய்தி அனுப்பி இருந்தார்கள். அந்த செய்தியில் ‘ நீங்கள் கூறிய அந்தப்பையன் இப்பொழுது சதம் அடிக்க ஆரம்பித்துவிட்டார்” என்று இருந்தது ” என்று கூறியுள்ளார்!