பாபர் அசாம் என் ஜூனியர்.. அவரை விமர்சிக்கனும் விடக்கூடாது – பாகிஸ்தான் வீரர் பரபரப்பான பேட்டி!

0
786
Babar Azam

பாதுகாப்பு காரணங்களைக் காட்டி உலகின் பெரிய கிரிக்கெட் நாடுகள் யாரும் சில காலமாக பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்யாமல் இருந்த காரணத்தினால், பாகிஸ்தான் கிரிக்கெட் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது!

பெரிய அணிகளுக்கு எதிராக உள்நாட்டில் கிரிக்கெட் விளையாட முடியாதது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை பெற முடியாமல் போனது.

- Advertisement -

மேலும் உள்நாட்டில் தொடர்ந்து சிறிய அணிகளோடு மட்டுமே விளையாடி வந்த காரணத்தினால், மைதானத்தை நோக்கி ரசிகர்களையும் பெரிய அளவில் இருக்க முடியவில்லை. இந்த இரண்டும் சேர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கான வருமானத்தை பெரிய அளவில் குறைத்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்நாட்டில் இளம் வீரர்களுக்காக பணம் செலவு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தானின் எதிர்கால கிரிக்கெட் வரை பாதித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு இளம் வீரராக வந்த பாபர் அசாம் தனித்த திறமையை பேட்டிங்கில் கொண்டு இருந்தார். இவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட செயல்பட ரசிகர்கள் மைதானத்திற்கு வர ஆரம்பித்தார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் மீது ஒரு புதிய வெளிச்சம் விழுந்தது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு முதல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து எனப் பெரிய அணிகள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்தன. இதுவெல்லாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை மீண்டும் நல்ல நிலைமைக்கு கொண்டு சென்று இருக்கிறது.

தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சியில் அந்த அணியின் கேப்டனாக இருக்கும் பாபர் அசாமுக்கு ஒரு முக்கிய பங்கு இப்படி இருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பாபர் அசாம் தனித்த செல்வாக்கு கொண்ட வீரராக ரசிகர்கள் மத்தியில் இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் அபித் அலி கூறும் பொழுது “நல்லது பாபரை விமர்சிப்பது. அப்படி விமர்சிக்கும் பொழுது அதற்கு நிற்காமல் ஸ்கோர் அடிக்கும் விதத்தில் அல்லாஹ் அருள் புரிவான். பாபர் என்னுடன் விளையாடினான். அவன் என் ஜூனியர். இப்போது உலக தரம் வாய்ந்த வீரர். இது அல்லாஹ் கொடுத்தது. அவனது திறமை குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவருடைய பேட்டிங் திறமை அவர் விளையாடுவதை பார்க்க அருமையாக இருக்கிறது.

கிரிக்கெட் உலகில் உள்ள அனைத்து வர்ணனையாளர்களும் அவரை பாராட்டுகிறார்கள். அல்லாஹ் அவருக்கு ஆரோக்கியத்தை வழங்கவும், அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கும் நாம் பிரார்த்தனைகள் செய்வோம். ஓரிரு போட்டிகளில் அவர் சரியாக செயல்படவில்லை என்றால் மக்கள் விமர்சனம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவரை விமர்சிப்பவர்கள் கூட அவர் நன்றாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் ஏழு போட்டிகளில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதே டி20 உலக கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விராட் கோலி 296 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது!