“விராட் கோலியை பாபர் ஆசம் ஈஸியா தாண்டுவர்!” – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் & பிரதமர் பேச்சு!

0
359
Babar

சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் 97 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை நிறைவு செய்து, ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் புதிய உலகச் சாதனையைப் படைத்திருந்தார்.

இதற்கு முன்பாக குறைந்த இன்னிங்ஸ்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5000 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் அசிம் ஆம்லா 101, விராட் கோலி மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் 114 இன்னிங்ஸ் என இருந்தார்கள்.

- Advertisement -

மேலும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அதிக நாள் முதலிடத்தில் இருந்தவர் என்ற சாதனையை விராட் கோலி 1013 நாட்கள் இருந்து படைத்திருந்தார். அதைப் பாபர் ஆசம் 1155 நாட்கள் முதலிடத்தில் இருந்து உடைத்தார். மேலும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் விராட் கோலியை விட பாபர் 523 ரன்கள்தான் பின்தங்கி இருக்கிறார். எனவே வயதில் அவரை விட குறைவான பாபர் இந்தச் சாதனையை முந்த வாய்ப்பு இருக்கிறது.

இதேபோல் டி20 கிரிக்கெட் வடிவத்தில் குறைந்த ஆட்டங்களில் 3000 ரன்களை நிறைவு செய்த உலகச் சாதனையில் விராட் கோலியை சமீபத்தில் பாபர் சமன் செய்திருந்தார். விராட் கோலி 81 ஆட்டங்களில் இந்த உலகச் சாதனையைச் செய்தார்.

தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு 1992ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை வாங்கி தந்த அந்த நாட்டின் மிக வெற்றிகரமான கேப்டனான இம்ரான் கான் விராட் கோலி மற்றும் பாபர் ஆசமை ஒப்பிட்டு சில முக்கியமான கருத்தைப் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மட்டும் கேப்டனாக இல்லாமல் அரசியலுக்குள் வந்து பாகிஸ்தான் நாட்டின் பிரதமராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கான் பேசும்பொழுது “நான் சமீபக்காலத்தில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவில்லை. ஆனால் விராட் கோலியும் பாபர் ஆசமும் ஒரே மாதிரியான திறன்களைக் கொண்ட கிளாஸ் பிளேயர் என்று தெரிய வருகிறது. மேலும் விராட் கோலியின் சாதனைகளைப் பாபர் ஆசம் எளிதில் தாண்டி விடுவார். நான் பார்த்ததில் அவர் மிகவும் திறமையானவராக இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!