“பாபர் அசாம் ரொம்ப சுமாரான கேப்டன்.. சாதாரண விஷயம் கூட தெரியல!” – கம்பீர் நேரடியான தாக்கு!

0
429
Babar

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கோப்பையை வெல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, இரண்டாவது சுற்றின் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறி இருக்கிறது!

பாகிஸ்தான் அணியின் வலிமையாக இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ரன்கள் தந்ததோடு, நசீம், ஹாரிஸ் என இரண்டு முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் இந்த இருவர் இல்லாதது, பாகிஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. மேலும் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை.

இந்தக் காரணங்களால் பரபரப்பான போட்டியில் கடைசி இரண்டு பந்தில் ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில், பாபர் அசாம் கேப்டனாக செய்திருந்த சில தவறுகளால், பாகிஸ்தான் அணி தோற்றது.

பொதுவாக பாபர் அசாம் நல்ல பேட்ஸ்மேன் ஆனால் சுமாரான கேப்டன் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு அழுத்தமான நேரத்தில் தெளிவான முடிவுகள் எடுப்பதில் சிரமங்கள் இருக்கிறது. அது களத்தில் அப்பட்டமாக தெரிகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் கேப்டனாக பாபர் அசாம் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் என்ன தவறுகள் செய்தார்? என்று சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.

இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது
“என்னைப் பொறுத்தவரை பாபர் அசாமின் கேப்டன்சி மிகவும் சுமாரான கேப்டன்சி. மிட் ஆஃப் திசையில் ஜமான் கான் மற்றும் ஷாகின் ஓவர்களில் பவுண்டரி அடிக்கப்பட்டது. அடிக்கப்பட்ட அந்த இரண்டு பவுண்டரிகளும் மெதுவான பந்தில் அடிக்கப்பட்டது.

நீங்கள் மெதுவாக பந்து வீச விரும்பினால், மிட் ஆஃப் பீல்டரை வெளியே தள்ளி லாங் ஆஃபில் வைக்க வேண்டும். இது மிகவும் எளிமையான ஒரு கேப்டன்சி. இதே கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவையாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்று யோசித்துப் பாருங்கள். அது இலங்கைக்கு கடினமாக இருந்திருக்கும்.

பாபர் ஒரு கட்டத்தில் இலங்கையை ஆட்டத்தை நகர்த்த அனுமதித்தார். அணியின் ஆறாவது பந்துவீச்சாளர் ஓவரை முடிப்பதற்கு அவர் விரும்பினார். அந்த நேரத்தில் குசால் மெண்டிஸ் மற்றும் சதீரா விளையாடி கொண்டு இருந்தார்கள். அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அந்த நேரத்தில், நம் அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டு வந்து விக்கெட் வீழ்த்த பார்க்க வேண்டும். ஆனால் பாபர் அதைச் செய்யவில்லை!” என்று கூறி இருக்கிறார்!