“கோலி ரோகித்த விட பாபர் அசாம் வேற லெவல்.. சம்பவம் காத்துகிட்டு இருக்கு!” – கம்பீர் கொடுத்த ஆச்சரியமான எச்சரிக்கை!

0
508
Gambhir

இந்தியாவில் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், உலகக் கோப்பை காய்ச்சல் வெகுவாக அதிகரித்திருக்கிறது!

தற்பொழுது உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும், அந்த அணிகளின் பலம் மற்றும் பலவீனம், அணிகளின் முக்கியமான வீரர்கள் யார்? என்பது குறித்து பரபரப்பான கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த மூன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகளில், உலகக் கோப்பை தொடரை நடத்திய நாடுகள்தான் வென்று இருக்கின்றன என்பது, இந்திய அணிக்கு எவ்வளவு நல்ல செய்தியோ அதே வகையில் அது அழுத்தமாகவும் மாறுகிறது.

மேலும் இறுதியாக இந்தியாவுக்கு முன்பாக 1996 ஆம் ஆண்டு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இலங்கை உலகக் கோப்பையை கைப்பற்றி இருந்தது. இதற்கடுத்து 15 வருடங்கள் கழித்துதான் மீண்டும் ஆசிய நாடான இந்தியாவுக்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வந்தது. தற்பொழுது கடைசி இரண்டு உலகக் கோப்பைகளும் ஆசியாவுக்கு வெளியே இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வென்றிருக்கின்றன.

எனவே மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை ஆசியாவை சேர்ந்த நாடுகள் கைப்பற்றுமா? குறிப்பாக தொடரை நடத்தும் இந்தியா வெல்லுமா? என்கின்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் போன்ற முத்திரை வீரர்களின் மீது எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

இந்த நிலையில் நடக்க இருக்கும் உலகக் கோப்பையில் பேட்டிங்கில் யார் பெரிதாக ஜொலிப்பார்கள் என்று கருத்து தெரிவித்துள்ள கம்பீர் ” பாபர் அசாம் இந்த உலக கோப்பையில் மிகவும் சிறப்பாக இருப்பார். ரோகித் சர்மா, விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் போன்ற பேட்டிங் டைம் அதிகம் கொண்ட வீரர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் யாரையும் விட விட லெவலான திறமை கொண்டவர் பாபர் அசாம்!” என்று கூறி இருக்கிறார்!