“பாபர் அசாம வச்சு நான் ஈசியா ஓவரை மெய்டன் பண்ணுவேன்!” – பாகிஸ்தான் முகமத் ஆசிப் பரபரப்பான பேச்சு!

0
1613
Asif

தற்போதைய கிரிக்கெட் உலகில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சரிசமமான திறமையை வெளிப்படுத்தக்கூடிய பேட்ஸ்மேனாக இருந்து வருபவர் விராட் கோலி!

விராட் கோலியின் புள்ளி விவரங்களை எடுத்து வைத்து பார்க்கும் பொழுது, கடைசிக்கட்ட ஓவர்களில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் நின்ற ஆட்டங்களில் எல்லாம், அதிரடி பேட்ஸ்மேன்களை விட அவருடைய செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் தற்கால கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்லப்படுபவர்கள் பெரும்பாலும், ஏதாவது ஒன்று அல்லது இரண்டு வகையான கிரிக்கெட்டில்தான் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். விராட் கோலி போல மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்தவர்களாக கிடையாது.

இப்படியான நிலையில் விராட் கோலி உடன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை ஒப்பீடு வைத்து பேசுவது தற்காலத்தில் மிக அதிகமாக இருக்கிறது. இதற்கு விராட் கோலியும் கூட தற்காலத்தில் அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் மூன்று வடிவ கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டு பார்க்கும் பொழுது பாபர் அசாம் ஸ்ட்ரைக் ரேட் ஒருநாள் கிரிக்கெட்டில் 89. டி20 கிரிக்கெட்டில் 128. அதே சமயத்தில் விராட் கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 94. டி20 கிரிக்கெட்டில் 138.

- Advertisement -

பாபர் அசாம் மிகக் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடக் கூடியவர் கிடையாது. ஆனால் அவர் சீராக ரன்களை எடுக்க கூடியவர். ஆனால் இது பெரிய தாக்கத்தை உருவாக்காது.

இந்திய அணியை எடுத்துக் கொண்டால் டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 140. அதே சுப்மன் கில் ஸ்டிரைக் ரேட் 146. இந்த வகையில் பாபர் அசாம் டி20 பேட்டிங் மீது எப்பொழுதும் பெரிய விமர்சனம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமத் ஆசிப் கூறும் பொழுது “இப்பொழுதும் என்னால் பாபர் அசாம்க்கு டி20 கிரிக்கெட்டில் மெய்டன் ஓவர் வீச முடியும். அவரால் நல்ல பந்துகளை அடித்து விளையாட முடியாது!” என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். இவருடைய பேச்சு சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது!