டி20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி படைத்த உலக சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பாபர் அசாம்

0
146

டி 20 கிரிக்கெட் போட்டியை பொருத்தவரையில் ஐசிசி வெளியிடும் டாப் 10 வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் தொடர்ந்து 1013 நாட்களாக இருந்து உலக சாதனையை தன் பக்கம் வைத்திருந்தார். சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அவர் முதல் இடத்தில் நீடித்து வந்து உலக சாதனை படைத்தார். தற்பொழுது அச்சாதனையை பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பாபர் அசாம் முறியடித்துக் காட்டியுள்ளார்.

விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய பாபர் அசாம்

- Advertisement -

1013 நாட்கள் முதல் இடத்தில் அதாவது நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக விராட் கோலி படைத்த சாதனையை நேற்று பாபர் அசாம் முறியடித்துள்ளார். நேற்று பாபர் அசாம் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் ஆக 1014*வது நாளில் அடி எடுத்து வைத்தார்.

இதன் மூலம் விராட் கோலி வசம் இருந்த உலக சாதனை தற்பொழுது பாபர் அசாம் பக்கம் சென்றுள்ளது. தற்பொழுது நல்ல பார்மில் பாபர் அசாம் இருப்பதால் நிச்சயம் இனி வரும் நாட்களிலும் அவர் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்க போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மறுபக்கம் விராட் கோலி தற்பொழுது நிறைய டி20 போட்டிகளில் விளையாட வில்லை. தென்னாபிரிக்க அணிக்கு எதிராகவும் அயர்லாந்து அணிக்கு எதிராகவும் அவர் ஓய்வெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நிறைய டி20 போட்டிகள் இருப்பதால், குறிப்பாக ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை டி20 தொடர் நடைமுறை இருப்பதால் விராட் கோலி மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்கிறாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

ஐசிசி தரவரிசை புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மனாக அதிக நாட்கள் நீடித்த வீரர்கள் :

பாபர் அசாம் – 1014* நாட்கள்

விராட் கோலி – 1013 நாட்கள்

கெவின் பீட்டர்சன் – 729 நாட்கள்

க்ரீம் ஸ்மித் – 690 நாட்கள்

ப்ரெண்டன் மெக்கல்லம் – 546 நாட்கள்