இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கு இந்திய அண்டர்-19 அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஆயுஸ் மத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் இதே அணியில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதில் அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்த பீகாரின் வைபவ் சூரியவன்சியும் இடம்பெற்று இருக்கிறார். இதன் காரணமாக இந்த இந்திய அண்டர்-19 அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்திய அண்டர்-19 அணி இங்கிலாந்து சென்று ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கு முன்பாக ஒரே ஒருநாள் பயிற்சி போட்டியிலும் விளையாடுகிறது. முதலில் பயிற்சி போட்டி ஜூன் 24ஆம் தேதி நடக்கிறது.
இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஜூன் 27 ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இதற்கு அடுத்து இறுதி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி ஜூலை ஏழாம் தேதி நடக்கிறது. இதற்கு அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஜூலை 12 மற்றும் ஜூலை 20ம் தேதிகளில் நடக்கிறது.
நடப்பு ஐபிஎல் சீசன் சிஎஸ்கேவுக்கு மிகவும் மோசமானதாக இருந்த போதிலும் ஆயுஸ் மத்ரே மிகவும் பாசிட்டிவான விஷயமாக இருக்கிறார். இவர் சிஎஸ்கே அணிக்கு 6 போட்டிகளில் விளையாடி 200 ரன்கள் தாண்டி 188 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். மேலும் சிஎஸ்கே அணிக்கு இந்த ஆண்டு அதிக ரன் குவித்தவர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
இதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக 14 வயது வைபவ் சூரியவன்சி ஏழு போட்டிகளில் 251 ரன்கள் எடுத்து 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். இந்த இருவருமே தற்பொழுது ஒரே அணியில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறுகிறாரா ஜெய்ஸ்வால்? ஒரே பதிவால் ஏற்பட்ட சந்தேகம்
இந்திய அண்டர்-19 அணி: ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் &வி.கீ), ஹர்வன்ஷ் சிங் (வி.கீ), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ராவ்னா படேல், யுதாவ்னா படேல், ஹென்ட், முகமது எனான், ஆதித்யா ராணா மற்றும் அன்மோல்ஜீத் சிங்.