இலங்கைக்கு எதிரான டி20 தொடர்.. இந்தியா புறக்கணித்த டாப் 5 வீரர்கள்.. திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்கல

0
2646

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

இந்த இரண்டு தொடர்களுக்குமான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், சூரிய குமார் யாதவ் கேப்டன் ஆக அறிவிக்கப்பட்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் மற்றும் சமீபத்தில் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து வீரர்கள் இடம்பெறவில்லை. அந்த ஐந்து வீரர்கள் பற்றி காண்போம்.

- Advertisement -

அபிஷேக் ஷர்மா

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்து வந்த அபிஷேக் ஷர்மா, சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பாக விளையாடி சதமும் அடித்த நிலையில் இலங்கையை தொடருக்கான டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்காக அவர் இன்னும் காத்திருக்க வேண்டி உள்ளது.

- Advertisement -

முகேஷ் குமார்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய முகேஷ் குமார் அந்த தொடரில் நன்றாக பந்து வீசி எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டதால் ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

குல்தீப் யாதவ்

இந்திய டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்த முன்னணி சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இடம்பெறாதது ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ரவீந்திர ஜரிஜா டி20 ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இவருக்கு இந்த தொடரில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தற்போது அக்சார் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய் போன்றவர்கள் முக்கியத்துவம் பெறுபவர்களாக உள்ளனர்.

ருதுராஜ் கெய்க்வாட்

ருதுராஜ் கெய்க்வாட் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இரண்டு அரை சதங்கள் அடித்து அசத்தியிருந்தார். மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டி20 ஃபார்மெட்டில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் அவருக்கு இந்த டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஜிம்பாப்வே தொடரில் விராட் கோலியின் இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நான் செலக்ட்டாக காரணம் கம்பீர் பையாதான்.. அவர் எனக்கு சொல்லிக் கொடுத்தது இதைத்தான் – ஹர்ஷித் ராணா பேட்டி

யுஸ்வேந்திர சஹால்

இந்திய அணியின் மூத்த சுழற் பந்துவீச்சாளர் ஆன சஹால் டி20 உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட களமிறங்காமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரையும் தவறவிட்டதை அடுத்து இலங்கைக்கு எதிரான தொடரில் நீக்கப்பட்டிருக்கிறார். இனி சகால் இந்திய அணியில் இடம் பெற வேண்டுமானால் அசாதாரணமான ஏதாவது ஒன்றை செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

- Advertisement -