நேற்று நடைபெற்ற ஐபிஎல் நான்காவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்றது குறித்து டெல்லி அணியின் கேப்டன் அக்ஷார் பட்டேல் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
இந்த போட்டியை பொருத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் லக்னோ அணியே முதலில் ஆதிக்கம் செலுத்தியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 11 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்திருந்தபோது, அதற்குப் பின்னர் தொடர்ச்சியாக விழுந்த விக்கெட்டுகளால் டெல்லி அணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. அந்த அணியைப் பொறுத்தவரை பூரன் 75 ரன்கள் குவித்தார்.
அதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு தொடக்கம் அதிர்ச்சிகரமாக அமைந்தது. 113 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த டெல்லி அணிக்கு அசிடோஸ் சர்மா மற்றும் விப்ராஜ் நிகாம் இருவரும் சேர்ந்து சிறப்பாக விளையாடி டெல்லி அணியை திரில் வெற்றி பெற வைத்தனர். இதில் விப்ராஜ் நிகாம் 15 பந்துகளில் 39 ரன்கள் அசிடோஸ் சர்மா 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்தனர். இந்த சூழ்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் அக்ஷார் பட்டேல் இந்த வெற்றி குறித்து சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.
இது குறித்து அக்ஷார் பட்டேல் கூறும்போது “இப்போது இதையெல்லாம் பழகிக் கொள்ளுங்கள். ஏனென்றால் என் கேப்டன்சியில் சில விஷயங்கள் இப்படி இருக்கும். விஷயங்கள் கொஞ்சம் ஏற்றும் இறக்கமாக இருக்கும். இப்போது நாங்கள் வெற்றி பெற்ற பிறகு அந்த ஓவரை ஏன் ஸ்டஃப்சிடம் கொடுத்தேன் என்று மக்கள் என்னை குறை கூற மாட்டார்கள். கடைசியாக இது போன்ற ஒன்றை பார்த்தது போல எனக்கு ஞாபகம் இல்லை.
இதையும் படிங்க:நான் மேட்ச் வின்னரா மாற.. காரணம் அந்த விஷயம்தான்.. என் அவார்ட் அவருக்கு சமர்ப்பிக்கிறேன் – அசிட்டோஸ் சர்மா
முதல் 6 ஓவர்கள் அவர்கள் ஆடிய விதத்தை பார்க்கும்போது ஆரம்பத்தில் அதிகமாக ரன்கள் விட்டுக் கொடுத்தோம் என்று நினைத்தேன். சில கேட்ச்களையும் நாங்கள் தவறவிட்டோம். அவர்கள் 240 ரன்கள் வரை எடுக்க முடியும் என்று தோன்றியது. ஆட்டத்தை
மாற்றி முக்கிய பங்கு வகித்த விப்ராஜ் நிகாமிற்கு எவ்வளவு திறமை இருக்கிறது என்று தெரியும்” என அக்சார் பட்டேல் பேசியிருக்கிறார்.






