நான் மேட்ச் வின்னரா மாற.. காரணம் அந்த விஷயம்தான்.. என் அவார்ட் அவருக்கு சமர்ப்பிக்கிறேன் – அசிட்டோஸ் சர்மா

0
2766

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த மிடில் வரிசை பேட்ஸ்மேன் அசிடோஸ் சர்மா இந்த வெற்றி குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

டெல்லி அணி திரில் வெற்றி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி மிச்சல் மார்ஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் மிச்சல் மார்ஸ் 72 ரன், பூரன் 75 ரன் குவித்தனர். டெல்லி அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கிய நிலையில் லக்னோ அணியின் சுழற் பந்துவீச்சால் வரிசையாக விக்கெட்டுகள் இழந்து கொண்டிருக்க, மிடில் வரிசையில் அசிடோஸ் சர்மா மற்றும் விப்ராஜ் நிகாம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதில் விப்ராஜ் 39 ரன் எடுத்து வெளியேற, அசிடோஸ் சர்மா கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார். 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

அசிட்டோஸ் சர்மா பேட்டி

இந்த வெற்றி குறித்து அவர் கூறும் போது ” கடந்த வருடத்திலிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஏனென்றால் கடந்த வருடத்தில் சில ஆட்டங்களில் என்னால் போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. அதனால்தான் உள்நாட்டு கிரிக்கெட்டில் நான் கவனம் செலுத்தி போட்டிகளை வெற்றிகரமாக முடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். கடைசி ஓவர் மற்றும் கடைசி பந்து வரை விளையாடினால் எதுவும் நடக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. இதற்கு எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும், நம்பிக்கைதான் மிகவும் முக்கியம்.

இதையும் படிங்க:அசுட்டோஸ் சர்மா இல்லை.. நாங்க தோற்க முக்கிய காரணமே அவர்தான் – லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்

எந்த ஷாட் உங்களுக்கு நன்றாக விளையாட வரும் என்பதை முயற்சி செய்திருப்பீர்கள். எனவே இன்று நான் அதைத்தான் செய்தேன். மேலும் இந்த ஆட்டத்தில் விப்ராஜ் பேட்டிங் அருமையாக இருந்தது. அவர் ஒரு முக்கிய புள்ளியை ஏற்படுத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடும் படி அவரிடம் கூறினேன். இதனால் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இந்த ஆட்டநாயகன் விருதை எனது வழிகாட்டியான ஷிகார் பாஜிக்கு (ஷிகார் தவான்)சமர்ப்பிக்க விரும்புகிறேன்” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -