AUSvsWI ODI.. 6 ஓவரில் போட்டியை முடித்த ஆஸி.. 8பேர் ஒற்றை இலக்கம்… வெஸ்ட் இண்டீஸ் பரிதாப தோல்வி

0
207
Australia

மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ப்ராத்வெயிட் தலைமையில் ஒன்றுக்கு ஒன்று என டிரா செய்தது.

இதற்கு அடுத்து ஷாய் ஹோப் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸ்மித் தலைமையிலான அணியை எதிர்த்து விளையாடுகிறது.

- Advertisement -

இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளையும் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் ஆறுதல் வெற்றி பெறுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாபந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியா அணி தங்களின் முடிவு எவ்வளவு சரியானது என்பதை அடுத்து பந்துவீச்சில் காட்டியது. மொத்தம் 24.1 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெறும் 86 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருட்டியது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் அலிக் ஆதனஸ் மட்டுமே தாக்குப்பிடித்து 60 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அந்த எட்டு வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. ஆஸ்திரேலிய தரப்பில் சேவியர் பார்ட்லெட் 4, லான்ஸ் மோரிஸ் மற்றும் ஆட்டம் ஜாம்பா இருவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு ஜாக் ஃபர்ரேசர் 18 பந்துகளில் 41 ரன்கள் அதிரடியாக எடுத்து ஆட்டம் இழந்தார். ஜோஸ் இங்லிஷ் ஆட்டம் 35 ரன்கள் எடுத்தார். வெறும் 6.5 ஓவர்களில் இலக்கை எட்டி ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : இங்கிலாந்து தொடரில் விராட் கோலி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?.. என்ன மாற்றங்கள் வரலாம்

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுவதுமாக வென்று, வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் உள்நாட்டில் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு தற்பொழுது ஆஸ்திரேலியா ரிவெஞ் எடுத்திருக்கிறது.