AUSvsWI.. அறிமுக வீரர் 5 விக்கெட்.. ஹெட் ஹேசில்வுட் அபாரம்.. 2வது நாளிலேயே நெருங்கும் டெஸ்ட்

0
201
Australia

தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இன்டீஸ் அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி நேற்று அடிலைய்ட் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெறுகிறது. போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதல் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துக் கொண்டது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் இன்னிங்ஸில் கிர்க் மெக்கன்சி 50, ஷாமார் ஜோசப் 36 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 188 ரன்கள் சேர்த்து சுருண்டது. கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய நாள் முடிவில் 59 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இன்று தொடர்ந்து விளையாடி 283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவஜா 45 ரன்கள் எடுத்திருக்க, டிராவிஸ் ஹெட் தனி ஒரு வீரராக அதிரடியாக போராடி 134 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 119 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் 27 வயதான ஷாமார் ஜோசப் 20 ஓவர் களுக்கு 94 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றி எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

இந்த நிலையில் 95 ரன்கள் பின்தங்கி இருந்த வெஸ்ட் இண்டீஸ் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மீண்டும் ஹேசில்வுட் மீண்டும் பெரிய தலைவலியாக மாறினார்.

கேப்டன் கிரேஜ் பிராட்வைட் 1, டேக்ரைன் சந்தர்பால் 0, அலிக் அதனஸ் 0, கெவிம் ஹாட்ஜ் 3 ரன்கள் என வரிசையாக ஹேசில்வுட் பெவிலியன் அனுப்பி வைத்தார்.

தற்போது வெஸ்ட் இண்டிஸ் அணி 73 ரன்களுக்கு ஆறு விக்கெட் இழந்து ஏறக்குறைய இன்னும் தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இன்னும் 22 ரன்கள் சேர்த்தால் மட்டுமே இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.