AUSvsAFG..14 வருடம்.. ஆப்கான் வரலாற்றில் முதல் முறை.. இப்ராகிம் ஜட்ரன் அதிரடி சாதனை!

0
721
Ibrahim

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மும்பை மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வது என அதிரடியாக முடிவு எடுத்தது. ஏற்கனவே இதே மைதானத்தில் இங்கிலாந்து இப்படியான ஒரு முடிவை எடுக்காமல் தென் ஆப்பிரிக்க அணியிடம் மிக மோசமாக தோற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டிக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி அதில் நான்கு போட்டிகளை வென்று 8 புள்ளிகள் உடன் அரையிறுதிக்கான வாய்ப்பில் கொஞ்சம் பலமாகவே இருக்கிறது.

இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா அணியை வென்றால் அரை இறுதி வாய்ப்பை மிகவும் பலப்படுத்துவதற்கு பெரிய வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இன்றைய போட்டிக்கு பெரிய முக்கியத்துவமும் ரசிகர்களின் வரவேற்பும் இருந்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க வீரராக வந்த குர்பாஸ் 21, ரகமத் ஷா 30, ஹசமத்துல்லா சாகிதி 26, ஓமர்ஸாய் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

ஆனாலும் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய துவக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பொறுப்பாகவும் அதே சமயத்தில் நிதானமாகவும் விளையாடிய அவர் அரை சதத்தை கடந்தார்.

இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாட நினைத்து கிடைத்த அடித்தளத்தை வீணாக்கிக் கொண்டதைப் போல செய்யக்கூடாது என்று மிகவும் பாதுகாப்பாகவே மேற்கொண்டு மொத்த ஆப்கானிஸ்தான அணியும் விளையாடியது. இப்ராகிம் ஜட்ரனும் அப்படியே விளையாடினார்.

இறுதியாக அவர் 131 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் சதத்தை எடுத்து அதிரடி காட்டினார். உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் வீரர் அடித்த முதல் சதமாக இது பதிவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான அணி 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக உலக கோப்பையில் முதல் சதம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறது!