ரோமானியாவில் தற்போது யூரோப்பியன் லீக் டி10 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஏழாவது லீக் போட்டியில் ஆஸ்ட்ரியா மற்றும் ரோமானிய அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
போட்டியின் முடிவில் ஆஸ்ட்ரிய அணி நம்பவே முடியாத வியத்தகு சாதனையை படைத்து மிகப்பெரிய இலக்கை அபாரமாக சேசிங் செய்து வெற்றி பெற்றுள்ளது.
ரோமானியாவின் தலைநகரான பச்சாரஸ்டில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்ட்ரியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. இந்த சூழ்நிலையில் முதலில் பேட்டிங் செய்த ரோமானியா அணி 10 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான ஹுசைன் முதல் பந்தில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மொய்ஸ் 14 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உடன் 42 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பின்னர் மூன்றாவது வரிசையில் களமிறங்கிய முகமது 39 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவிக்க, இதனால் ரோம் அணி 10 ஓவர்களை எதிர்கொண்டு 167 ரன்கள் குவித்தது. மிகப்பெரிய வெற்றி இலக்கை எதிர் கொண்டு களம் இறங்கிய ஆஸ்ட்ரியா அணிக்கு 5.4 ஓவர்களில் 77 ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகள் பறி கொடுத்தது. அதற்குப் பிறகு ஓரளவு அதிரடியாக விளையாடி எட்டு ஓவர்கள் முடிந்த நிலையில் 107 ரன்கள் குவித்திருந்தது.
ஆஸ்திரியா அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 61 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இக்பால் மற்றும் ஆசிப் ஆகியோர் களத்தில் இருந்தனர்.குறிப்பாக ரோமானியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இக்பால் வெறும் 19 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சகள் என 71 ரன்கள் குவித்தார். அப்போது அவரது பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 378 ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஒன்பதாவது ஓவரை மன்மீத்கோலி வீச இக்பால் மற்றும் ஆசிப் ஜோடி அந்த ஓவரில் மட்டும் நோ பால், வைட் உட்பட 41 ரன்கள் குவித்தது. மொத்தமாக இரண்டு ஓவரை வீசிய கோலி இரண்டு ஓவர்களில் 57 ரன்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆட்டத்தில் இறுதி ஓவரை வீசிய சமிகா பெர்னான்டஸ் வீச அந்த ஓவரில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு ரன் உடன் 25 ரன்கள் குவித்து ஒரு பந்தை மீதும் வைத்து 9.5 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் நம்ப முடியாத வெற்றியை ஆஸ்திரியா பதிவு செய்தது.
இதையும் படிங்க:ரோகித் தங்கம்.. விராட் பதவியும் பணமும் வந்ததும் மாறிட்டார்.. நான் பேசறதே இல்ல – அமித் மிஸ்ரா வருத்தம்
ரோமானிய அணி எக்ஸ்ட்ராஸில் அதிக ரன்களை கொடுத்தது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த 19 பந்துகளில் 71 ரன்கள் குவித்த அகிப் இக்பால் ஆட்டநாயகன் பிரதி வென்றார்.