இந்திய அணியின் முன்னாள் வீரரான சுழல் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பலதரப்பட்ட கேள்விகளுக்கு மிகவும் வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார். குறிப்பாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பற்றி மிக வெளிப்படையாக பேசி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
அமித் மிஸ்ரா 2008இல் அறிமுகமாகி விராட் கோலியின் கேப்டன்சியில் ஒன்பது டெஸ்ட் போட்டிகள் விளையாடுகிறார். கடைசியாக அவர் இந்த ஆண்டு லக்னோ அணியில் இடம் பெற்றும் இருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற போதும் ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ந்து வருகிறார்.
இத்தோடு தன்னுடன் விளையாடிய வீரர்கள் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள் என எல்லோர் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசி அதிர்வுகளை உருவாக்கி இருக்கிறார். இந்த வகையில் அவரிடம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பற்றி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து பேசிய அமித் மிஸ்ரா “சச்சின் டெண்டுல்கருக்கும் தோனிக்கும் இருக்கும் அதே மரியாதை எல்லோருக்கும் நேர்மையாக இருக்க முடியாது. என்னால் பொய் சொல்ல முடியாது. ஒரு கிரிக்கெட் வீரராக நான் விராட் கோலியை மிகவும் மதிக்கிறேன். ஆனால் நான் அவருடன் ஆரம்பத்தில் இருந்தது போல் நட்பை இப்பொழுது பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. அதே சமயத்தில் ரோகித் இயல்புகள் வேறு. நான் அவரை முதல் நாள் சந்தித்த போதும் இப்பொழுதும் அவர் ஒரே மாதிரி இருக்கிறார்.
நான் பல வருடங்களாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. இன்னும் ஐபிஎல் போட்டியின் போது வேறு எங்காவது ரோகித் சர்மாவை சந்திக்கும் பொழுது அவர் மிகவும் சகஜமாக கேலி செய்து பேசுவார். நாமும் திருப்பி அவரை அதே முறையில் பேச முடியும். அவர் என்ன நினைப்பார் என்று நாம் யோசிக்க வேண்டியதில்லை. உலகக்கோப்பை வென்றுவிட்டார் மேலும் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று இருக்கிறார். ஆனாலும் ரோகித் சர்மா அதே போலவே இருக்கிறார்.
இதையும் படிங்க : நான் ஸ்டார்.. ஆனால் அந்த வீரர் என்னை திட்டி அழ வச்சுக்கிட்டேதான் இருப்பார் – லாரா வெளியிட்ட சுவாரசிய தகவல்
விராட் கோலி நிறைய மாறிவிட்டார். நாங்கள் கிட்டத்தட்ட பேசுவதை நிறுத்தி விட்டோம்.உங்களுக்கு புகழும் அதிகாரமும் கிடைக்கும் பொழுது, உங்களிடம் பேச வருகின்றவர்கள் ஏதோ நோக்கத்திற்காக வருகின்றார்கள் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது. விராட் கோலியை 14 வயதில் சமோசா விரும்பி சாப்பிடும் காலத்திலேயே தெரியும். இரவில் அவரால் பீட்சா சாப்பிடாமல் உறங்க முடியாது. சந்திக்கும்போதெல்லாம் மிகவும் மரியாதை கொடுப்பவராக இருப்பார். ஆனால் வெளிப்படையான நட்பு இருக்காது” என்று கூறியிருக்கிறார்.