கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க ஆஸ்திரேலியா போட்ட மாஸ்டர் பிளான்!

0
99
CA

உலக விளையாட்டு திருவிழா என்றால் அது ஒலிம்பிக் போட்டிகள் தான். உலகின் பல நாடுகளும் பல விளையாட்டுகளும் அங்கம் பெரும் ஒரு மிகப்பெரிய விளையாட்டு கொண்டாட்டம் ஒலிம்பிக் ஆகும். ஒலிம்பிக்கில் மூளையைக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி கிடையாது, தனிப்பட்டோ குழுவாகவோ உடலைக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டுகளுக்கே அனுமதி உண்டு!

ஒலிம்பிக்கில் விதிகள் இப்படியிருந்தும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் ஒரு அங்கமாக இருக்க முடியவில்லை. 1990 ஆம் வருடம் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தான் முதல் முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு கிரிக்கெட் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படவில்லை.

- Advertisement -

இந்தநிலையில் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான விளையாட்டுப் போட்டிகள் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் கிரிக்கெட் இடம் பெறவில்லை. இந்த நிலையில்தான் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்டில் நிலை இருக்கிறது.

2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து, 2032 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு விளையாட்டுகளை அதில் சேர்க்கும் உரிமையைப் பெற்று இருக்கிறது. இந்த உரிமையின் அடிப்படையில் ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டை சேர்க்க முயற்சிகள் செய்து வருகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நிர்வாக இயக்குனர் நிக் ஹாக்லி கூறும்பொழுது ” இந்த மூலோபாயம் தொலைநோக்கு மற்றும் தெளிவான ஒரு திட்டம் என இரண்டையும் கொண்டிருக்கிறது. நமது முக்கிய பொறுப்புகளில் நாம் எப்படி வெற்றி அடையலாம் என்று தைரியமாய் முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது, அதற்கு வெளியில் இருந்து கிடைக்கும் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆஸ்திரேலியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் ஒரு விளையாட்டாக ஆக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -