இந்திய கிரிக்கெட்

2026 டி20 உலக கோப்பை.. ஆஸ்திரேலியா சாம்பியன் வீரர் காயத்தால் விலகல்.. இன்னொரு வீரரும் சந்தேகம்

2026 டி20 உலக கோப்பை தொடரிலிருந்து ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் ஒருவர் காயத்தால் விலகி இருக்கிறார். மேலும் இன்னொரு முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து இன்னும் திரும்பி வராமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்த முறை டி20 உலகக் கோப்பை தொடருக்கு வருகின்ற ஆஸ்திரேலிய டி20 அணி மிகவும் பலவீனமானதாக காணப்படுகிறது. ஆஸ்திரேலிய நட்சத்திர முன்னாள் வீரர்களே இந்த முறை அவர்களது அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாது என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

சந்தேகமான வீரர்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் சமீபத்தில் நாதன் எல்லீஸ் மிகவும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். பொதுவாக நடுவில் மற்றும் இறுதியில் பந்து வீசக்கூடிய அவர் பவர் பிளேவில் பந்து வீசும் அளவுக்கு மாறி இருந்தார்.

மிகக் குறிப்பாக 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் அளவுக்கு தயாராகி இருந்தார். இதன் காரணமாக பல வேரியேஷன்கள் இருப்பதால் அவர் இந்த முறை மிகவும் முக்கியமான வீரராக ஆஸ்திரேலியா அணிக்கு இருந்தார். ஆனால் அதற்குத் தொடையில் ஏற்பட்ட தசை பிடிப்பு இன்னும் சரியாகாத நிலையில் அவர் உலகக்கோப்பைக்கு வருவாரா? என்பது சந்தேகமாக இருக்கிறது.

- Advertisement -

நட்சத்திர வீரர் விலகல்

இந்த நிலையில் ஆஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயத்தின் காரணமாக டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியா அணியில் இருந்து வெளியேறுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. இது அவர்களுக்கு பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா மட்டும் இல்லனா.. முகமது சிராஜ் தேம்பி தேம்பி அழுதிருப்பாரு.. சஹால் சொன்ன சீக்ரெட்

இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தரப்பில் ” நாங்கள் அவர் சூப்பர் 8 சுற்றுக்கு கிடைத்து விடுவார் என்று நினைத்தோம். ஆனால் அவர் இன்னும் காயத்தில் இருந்து மீளவில்லை. நாம் அவரை அவசரப்படுத்துவது மோசமான சூழ்நிலையை உண்டாக்கி விடும் எனவே நாங்கள் அதை விரும்பவில்லை” என்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts