2007ம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று சரித்திரம் படைத்த இந்திய அணி, அதற்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் மீண்டும் உலகக் கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
இந்த சூழ்நிலையில் இந்த உணர்ச்சி மிக தருணங்கள் குறித்து இந்திய சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற முடியாத சமயத்தில் இருந்தது. அப்போது தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் பும்ராவின் இறுதிக்கட்ட இரண்டு ஓவர்கள் ஆட்டத்தின் போக்கையே முற்றிலுமாக மாற்றியது. அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கிளாஸனை ஹர்திக் பாண்டியா வீழ்த்த அதற்கு பின்பு தலைகீழாக மாறியது.
மேலும் இறுதியில் சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்ச் இந்திய அணி உலக கோப்பையை வெல்வதை இன்னொரு முறை உறுதி செய்தது. இந்த சூழ்நிலையில் இது குறித்து மனம் திறந்து பேசி இருக்கும் யுஸ்வேந்திர சஹால், இந்திய அணி t20 உலக கோப்பை வென்ற தருணத்தை இந்திய மக்கள் அனைவருமே அழுது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் சிராஜ் இந்திய அணி தோற்றுவிடும் என்று அழத் தொடங்கியதாக சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் ஹென்றிச் கிளாசன் 12 பந்துகளில் போட்டியை முடிப்பார் என்று நினைத்தோம். ஆனால் ஹர்திக் பாண்டியா அவரை அவுட் செய்த போது எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக நாங்கள் அறிந்தோம். அந்த உலகக் கோப்பையை வென்றது என் வாழ்க்கையின் சிறந்த உணர்வு.
அந்த வெற்றிக்குப் பின்னர் இந்திய தேசம் முழுவதும் அழுது இருக்க வேண்டும். தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டபோதே முகமது சிராஜ் அழத் தொடங்கி விட்டார். ஆனால் காத்திரு இன்னும் போட்டி முடியவில்லை என்று நான் சொன்னேன். 2019 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியின் போதும் இந்திய வீரர்கள் அழுதனர்” என்று பேசி இருக்கிறார்.






