“கடைசி டெஸ்ட் போட்டியிலும் தொடரும் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம்” …. “உஸ்மான் கவஜா அபார சதம்” …. ஆட்ட நேர முடிவில் 255/4

0
146

பார்டர் கவாஸ்கர் கோப்பையின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று துவங்கியது. இந்தப் போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக இந்திய மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர்கள் கலந்து கொண்டன.

டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் முகமது சிராஜிக்கு பதிலாக முகமது சமி அணியில் சேர்க்கப்பட்டார். ஆட்டம் துவங்கியதிலிருந்து ஆஸ்திரேலியா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். இந்தத் தொடரில் அதிகபட்ச முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக இருவரும் இணைந்து 61 ரன்களை சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணியின் இலக்கம் 61 ஆக இருந்தபோது ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் டிராவஸ் ஹெட் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ஸ் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இவரைத் தொடர்ந்து ஆட வந்த மார்னஸ் லபுசேன் முகமது சமியின் வேகத்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் களத்திற்கு வந்தார். இவரும் உஸ்மான் கவஜாவும் இணைந்து ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக ஆடிய உஸ்மான் இந்தத் தொடரில் தனது மூன்றாவது அறை சதத்தை பதிவு செய்தார். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 79 ரகளை சேர்த்தது. ஸ்டீவன் ஸ்மித் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஆட வந்த பீட்டர் ஹான்ஸ்கம் 17 ரன்களில் முகமது சமியின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

உஸ்மான் கவஜா உடன் இணைந்தார் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். இந்தத் தொடரில் சிறப்பாக ஆடிவந்த உஸ்மான் கவாஜா தனது சதத்தை பதிவு செய்தார். அவர் இன்றைய ஆட்ட நேர முடிவில் 251 பந்துகளுக்கு 104 ரன்கள் உடன் களத்தில் உள்ளார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய கிரீன் 64 பந்துகளில் 49 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய அணியின் பந்துவீச்சில் முஹம்மது சமி இரண்டு விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கின்றனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி வலுவான நிலையில் இருக்கிறது.

- Advertisement -