உலக கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி 2025.. கம்மின்ஸ் தலைமையில் அறிவிக்கபட்ட பலமான ஆஸி அணி.. 3 முக்கிய மாற்றம்.. முழு விபரம்

பாகிஸ்தானில் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் இதில் பங்கு பெற உள்ள அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட அணிகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணியும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ள அணியை அறிவித்துள்ளது.

- Advertisement -

இதில் ஆஸ்திரேலியா அணி பேட் கம்மின்ஸ் தலைமையில் மூன்று முக்கிய மாற்றங்களை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி 2025

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணி 15 பேர் கொண்ட வலுவான அணியை அறிவித்திருக்கிறது. ஆஸ்திரேலியா சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய உத்வேகத்துடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ளும். பேட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணியில் இந்திய தொடரில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹெசில்வுட் இந்தத் தொடரில் விளையாடுவார்.

அதேபோல உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் ஆஸ்திரேலியா அணிக்கு திரும்பி இருக்கிறார். மேலும் தற்போது புதிய வரவாக ஆஸ்திரேலியா அணிக்கு ஆல்ரவுண்டர் வீரர்களான மாட் ஷார்ட் மற்றும் ஆரோன் ஹார்டி ஆகியோர் தேவையான வலிமையை ஆஸ்திரேலியா அணிக்கு வழங்குகின்றனர். மேலும் வழக்கம் போல ஸ்மித், ஸ்டார்க், ட்ராவிஸ் ஹெட், லாபுஷேன் ஆகிய வீரர்கள் வெற்றிகளை தேடி தருவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

- Advertisement -

அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி

ஆஸ்திரேலியா அணி முதல் போட்டியாக பிப்ரவரி 22ஆம் தேதி லாகூரில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அதற்குப் பிறகு 25ஆம் தேதி ராவல் பிண்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், 28ஆம் தேதி லாகூரில் ஆப்கானிஸ்தான் அணியும் எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய அணி இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:அவர் இல்லாதனால இந்திய அணியின் பலம் பாதியா குறைஞ்சிருக்கு.. எங்க அணிதான் ஜெயிக்கும் – பாக் முகமது அமீர்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கு பெற உள்ள 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி : பாட் கம்மின்ஸ் (கேட்ச்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.

- Advertisement -
Published by

Recent Posts