அவர் இல்லாதனால இந்திய அணியின் பலம் பாதியா குறைஞ்சிருக்கு.. எங்க அணிதான் ஜெயிக்கும் – பாக் முகமது அமீர்

0
947

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ள நிலையில் அதற்கு அடுத்ததாக பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கு பெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தும் என்று அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

கடைசியாக நடைபெற்ற மினி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. அதற்குப் பிறகு சில ஆண்டுகள் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறாத நிலையில் தற்போது பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தான் அணி மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளது. இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த சிக்கலில் இருக்கிறது.

மேலும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இருந்து விலகினார். மேலும் அவரது காயத்தின் தன்மை சற்று தீவிரமாக இருப்பதால் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பங்கு பெற மாட்டார் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் பும்ரா இல்லாதது இந்திய அணியின் பந்துவீச்சு பலத்தை பாதியாக குறைத்துள்ளது என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவின் பலம் பாதியாக குறைந்துள்ளது

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ரா இல்லை என்றால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவர் எப்போதுமே இந்திய அணியின் பந்து வீச்சை முன்னின்று சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார். அவர் இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதல் அதன் பலத்திலிருந்து 40 முதல் 50 சதவீதம் வரை பாதியாக குறைந்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் அணி விளையாடிய விதம் சிறப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க:நானும் தோனியும் நல்ல ஃபிரண்ட்ஸ்தான்.. ஆனா அவர்கிட்ட இந்த விஷயம் சுத்தமா பிடிக்காது – உத்தப்பா பேட்டி

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது அதன் வலிமையை காட்டுகிறது. குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தான் அணியின் தற்போதைய செயல்பாடுகளை கருத்தில் கொண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெறும் என்று நம்புகிறேன். இருப்பினும் பெரிய போட்டிகளில் எப்போதுமே இந்திய அணி எனக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் இப்போது இந்திய அணி அழுத்தத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -