இந்திய அணியில் ஆக்ரோஷமான முறையில் களத்தில் செயல்படுவதில் முன்னுதாரணமாக விராட் கோலி இருக்கிறார். ஆனால் ஆஸ்திரேலியா வீரர்கள் மற்றொரு இந்திய வீரர்தான் அதிக ஸ்லெட்ஜிங் செய்வார் என கூறியிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் நவம்பர் 22ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கிறது. இதை ஒட்டி ஆஸ்திரேலியா வீரர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு சிறப்பு பேட்டி கொடுத்து வருகிறார்கள். அதில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா வீரர்களின் ஒருமித்த கருத்து
ஆஸ்திரேலியா வீரர்கள் ஹெட், லபுசேன் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் இந்திய வீரர்களில் அதிகம் யார் ஸ்லெட்ஜிங் செய்வார்கள் என்ற கேள்விக்கு விராட் கோலியை விட ரிஷப் பண்ட்தான் அதிகம் ஸ்லெட்ஜிங் செய்வார் என கூறியிருக்கிறார்கள்.
ரிஷப் பண்ட் இப்படி ஆன நடவடிக்கையில் ஈடுபட்டாலும் கூட, அவர் பேசுவதற்கு பல நேரங்களில் எந்த அர்த்தமும் இருக்காது என்றும், அவர் ஸ்டெம்புகளுக்கு பின்னால் மிகவும் வேடிக்கையாக இருக்கக்கூடிய வீரர் எனவும் நல்ல முறையில் தெரிவித்திருக்கிறார்கள்.
2021ல் ஆஸ்திரேலியாவில் ரிஷப் பண்ட்
2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அந்த அணியின் கேப்டனாக டிம் பெயின் இருந்தார். அவர் பேட்டிங் செய்ய வந்த பொழுது ரிஷப் பண்ட் தற்காலிக கேப்டன் விளையாட வந்திருப்பதாகவும், அவர் ஏதோ பேச நினைக்கிறார் எனவும், அவருக்கு பேச மட்டும்தான் வரும் எனவும் கூறி ஸ்லெட்ஜிங் செய்தார்.
இதையும் படிங்க : கம்பீரை இந்த விஷயத்துக்கு வாழ்த்துறேன்.. ஆனா தோனியை சந்திக்கிறப்ப இதான் நடக்கும் – கம்ரன் அக்மல் பேட்டி
இதற்கு முன்பாக டிம் பெயின் இந்திய வீரர்களை வம்பிழுத்து இருந்தார். காபா மைதானத்திற்கு வந்து பாருங்கள் என்று சவால் விட்டிருந்தார். மேலும் ரிஷப் பண்ட்டை தன்னுடைய குழந்தைகளின் பாதுகாப்பாளராக இருக்கும் படியும் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலடியாகவே ரிஷப் பண்ட் இரு மடங்கு வார்த்தை தாக்குதலில் ஈடுபட்டார். இறுதியாக டிம் பெயின் குடும்பத்துடன் ரிஷப் பண்ட் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கடைசியாக எல்லாம் நல்ல முறையில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது!