கம்பீரை இந்த விஷயத்துக்கு வாழ்த்துறேன்.. ஆனா தோனியை சந்திக்கிறப்ப இதான் நடக்கும் – கம்ரன் அக்மல் பேட்டி

0
47
Gambhir

பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கம்ரன் அக்மல் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கவுதம் கம்பீர் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவர் குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இவர்கள் விளையாடிய காலகட்டத்தில் கம்ரன் அக்மல் மற்றும் கம்பீர் இருவரும் களத்தில் மோதிக்கொண்ட காலங்களும் உண்டு. ஆனால் களத்திற்கு வெளியே இருவரும் நண்பர்களாகவே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறார்கள். தற்போது இதை கம்ரன் அக்மல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தலைமை பயிற்சியாளராக முதல் வெற்றி

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீரம் பொறுப்பேற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் முதல் டெஸ்ட் வெற்றியையும் அதே அணிக்கு எதிராகவும் பெற்று இருக்கிறார். முதல் டெஸ்ட் வெற்றி என்பது எப்பொழுதும் சிறப்பு வாய்ந்தது.

இதுகுறித்து கூறியிருக்கும் கம்ரன் அக்மல் பேசும் பொழுது “கம்பீரும் நானும் மிகவும் நல்ல நண்பர்கள். நான் அவருடன் நல்ல உறவை பகிர்ந்து கொள்கிறேன். அவர் என்னுடைய சகோதரன் போன்றவர். உண்மையில் பயிற்சியாளராக முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றதற்கு அவருக்கு நான் வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன்”

- Advertisement -

தோனியை சந்தித்தால் இதுதான் நடக்கும்

மேலும் பேசிய கம்ரன் அக்மல் “தோனி முற்றிலும் வித்தியாசமான மனநிலை கொண்டவர் மேலும் அவர் முழுமையான மேட்ச் வின்னர். அவர் அமைதியாக இருந்து விளையாடிய விதம் மிகவும் அருமையானது. நாங்கள் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். மேலும் தோணியுடன் பேசுவது எப்பொழுதும் சிறப்பான ஒன்றாக இருந்திருக்கிறது”

இதையும் படிங்க: நாளை முதல் டி20.. கவலை தரும் மழை வாய்ப்பு.. 14 வருட சரித்திர மைதானம்.. போட்டி நடக்குமா? – முழு தகவல்கள்

“இன்றும் கூட சர்வதேச அளவில் அல்லது சுற்றுப் பயணங்களின் போது தோனியை யார் சந்தித்தாலும் அவரிடம் ஆலோசனைகளையும் சந்தேகங்களையும் கேட்கிறார்கள். அவரிடம் கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். மேலும் மூத்த வீரர் மற்றும் சிறந்த செயல் திறன் கொண்ட ஜாம்பவான். அவர் இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -