இந்திய அணிக்கு எதிரா ஈஸியா ஆடறனா.. நான் ரன் குவிக்க அவங்க வசதியா இருக்காங்களா? – டிராவிஸ் ஹெட் பதில்

0
108
Head

இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதின் காரணமாக, தான் விளையாடுவதற்கு இந்திய அணி மிகவும் பிடித்தமான எதிரணியா என்பது குறித்து டிராவிஸ் ஹெட் பதில் கூறியிருக்கிறார்.

தற்போது உலக கிரிக்கெட்டில் மிகவும் அதிரடியான வீரராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் இருந்து வருகிறார். இந்திய வீரர் ஷேவாக் போல முதல் பந்தில் இருந்து விக்கெட் பற்றி எந்தவித கவலையும் படாமல் விளையாட கூடியவராக இருக்கிறார். அவருடைய நாளில் தனி வீரராக ஆட்டத்தை வென்று ஆஸ்திரேலியாவிற்கு கொடுத்து விடுகிறார்.

- Advertisement -

இந்திய அணிக்கு ஹெட் தந்த தலைவலி

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவை கலைத்தார். அந்தப் போட்டியில் அவர் அதிரடியாக விளையாடிய விதம் ஒட்டுமொத்தமாக இந்திய அணியை போட்டியில் இருந்தே வெளியேற்றி விட்டது.

இதைவிட மிகப்பெரிய துயரமாக கடந்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவில் வைத்து இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து பல கோடி இந்தியர்களின் துயரத்துக்கு காரணமாக அமைந்தார். இதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் நீண்ட ஆண்டுகளுக்கு மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இரண்டாவது சுற்று போட்டியில் மீண்டும் இந்திய அணிக்கு எதிராக தனி ஒரு வீரராக கடுமையான போட்டியை பேட்டிங்கில் கொடுத்தார். ஆனால் அவர் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தபொழுதும் மற்றவர்கள் சிறப்பாக விளையாடாததால் இந்திய அணி வென்றது.

மிகவும் பிடித்த எதிரணி இந்திய அணியா?

இதுகுறித்து டிராவிஸ் ஹெட் கூறும் பொழுது “இந்திய அணி எனக்கு பிடித்த எதிரணி என்று எனக்குத் தோன்றவில்லை. இந்திய அணிக்கு எதிராக நாங்கள் போதுமான அளவுக்கு நிறைய விளையாடுகிறோம் என்று நினைக்கிறேன். மேலும் கடந்த இரண்டு வருடங்களாக நான் நல்ல ஃபார்மில் இருந்து வருகிறேன். எனவே என்னால் அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட முடிந்தது. போட்டிக்கு நல்ல முறையில் வருவது எனக்கு சிரமமாக இருக்கவில்லை.

இதையும் படிங்க :

இதன் காரணமாக இந்திய அணிக்கு எதிராக மிகவும் வசதியாக விளையாடுகிறேன் அவர்கள் எனக்கு பிடித்த எதிரணி என்று கூற மாட்டேன். அவர்கள் உண்மையில் கடுமையான போட்டியை கொடுக்க கூடியவர்கள். அவர்களுக்கு எதிராக ஓரிரு போட்டிகளில் நான் நன்றாக விளையாடியது மகிழ்ச்சி.மேலும் நான் நன்றாக தயாராகி வர முடியும் என்று நம்புகிறேன். இந்தக் கோடை காலத்தில் அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவேன் என்றும் நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -