கிரிக்கெட்

சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியா வீரர்” – ஐபிஎல் தொடரின் முதல் நாயகன்!

ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷான் மார்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

வெஸ்டன் ஆஸ்திரேலியாவை சார்ந்த கிரிக்கெட் வீரரான இவர் 2001 ஆம் ஆண்டு தனது 17 வயதில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தனது கிரிக்கெட் வாழ்வை தொடங்கினார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தனது ஓய்வை அறிவித்திருக்கிறார் ஷான் மார்ஸ். இவர் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ஜெப் மார்சின் மகன் ஆவார். ஆஸ்திரேலிய டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஆடிவரும் அதிரடி ஆல் ரவுண்டர் மிச்சல் மார்சின் சகோதரர் ஆவார்.

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்காக 183 முதல் தரப் போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 12032 ரன்களை குவித்திருக்கிறார். இதில் 32 சதங்களும் 58 அரை சதங்களும் அடங்கும். ஆஸ்திரேலிய அணிக்காக 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 2265 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஆறு சதங்களும் 10 அரை சதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 183. 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை துவங்கினார் ஷான் மார்ஸ். 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக கடைசியாக ஆடி இருக்கிறார்.

2008 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் ஷான் மார்ஸ். ஆஸ்திரேலியா அணிக்காக 73 ஒரு நாள் போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 2773 ரன்களை சேர்த்திருக்கிறார். இதில் ஏழு சதங்களும் 15 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 151 ஆகும்.

- Advertisement -

2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியின் மேற்கிந்திய தீவுகளின் சுற்றுப்பயணத்தின் போது டி20 சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார் ஷான் மார்ஸ். 2016 ஆம் ஆண்டு இந்தியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இவர் ஆஸ்திரேலியா அணிக்காக கடைசியாக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 15 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 255 ரன்கள் ஆஸ்திரேலியா அணிக்காக சேர்த்திருக்கிறார். அதிகபட்ச ஸ்கோர் 47.

ஐபிஎல் போட்டி தொடர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக பாடிய ஷான் மார்ஸ் அதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் கவனத்தை ஈர்த்தார் என்றால் மிகையாகாது. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் 11 போட்டிகளில் ஆடிய இவர் 616 ரன்களை எடுத்து ஆரஞ்சு கேப் ஹோல்டராக அந்தத் தொடரில் அறிவிக்கப்பட்டார். இதுவரை 71 ஐபிஎல் போட்டிகளில் ஆடி இருக்கும் ஷான் மார்ஸ் 2477 ரன்களை குவித்திருக்கிறார். இதில் ஒரு சதமும் 20 அரை சதங்களும் அடங்கும்.

- Advertisement -
Published by

Recent Posts