இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்புவது குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. உள்நாட்டு தொடர்கள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான திறமையின் மூலம் தேசிய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.
வரவிருக்கும் நியூசிலாந்து தொடரில் புவனேஷ்வர் குமாரின் திறமை மற்றும் அவரது உடற்தகுதி குறித்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அணியின் நீண்டகால திட்டங்களில் அவரை சேர்ப்பதற்கு முன்பு இந்த தொடரில் அவரது ஆட்டத்தை மட்டுமே உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பரத் அருண் பேசும்போது “புவனேஷ்வர் குமாரைப் பொறுத்தவரை, நான் மிகத் தொலைதூரமாக சிந்தித்து பார்க்க மாட்டேன். ஆம், அவர் பார்மின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு அற்புதமான பவுலர், அது எல்லோருக்கும் தெரியும். அவர் எத்தகைய திறமை வாய்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அவர் எப்படி செயல்படுகிறார் என்பதுதான் மிகவும் முக்கியமானது” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து அவர் தனது கருத்தை ஆழமாக விளக்கும்போது “புவனேஷ்வர் குமாரைப் பொறுத்தவரை அவரது திறமை பிரச்சனையில்லை, அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு உலகக் கோப்பைக்காக தொடர்ந்து விளையாடும் அளவுக்கு அவர் எவ்வளவு ஃபிட்டாக இருக்கப் போகிறார் என்பதுதான் விஷயம். ஆனால் இப்போதைக்கு, என் மூக்கின் கீழ் உள்ள விஷயங்களை மட்டுமே நான் பார்ப்பேன். நியூசிலாந்து டூர் தான் மிகப்பெரிய டெஸ்ட், நான் அதைப் பார்ப்பேன், மீதமுள்ளவற்றுடன் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை முடிவு செய்வதற்கு முன்பு இதை கவனிப்பேன்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இந்த விவகாரத்தின் அடுத்த கட்டமாக அணியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பரத் அருண் மேலும் பேசும்போது “நீண்ட காலம் என்றால் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் ஒன்றரை ஆண்டுகள் வரை பார்க்கிறீர்கள். என்னிடம் கேட்டால், ஆம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடக் கூடிய அளவுக்கு புவனேஷ்வர் ஃபிட்டாக இருக்கிறார். அவர் காட்டியுள்ளபடி, அவரது பார்ம் மற்றும் பந்தை ஸ்விங் செய்யும் திறன் ஆகியவை அருமையாக உள்ளன. மேலும், புவனேஷ்வர் நன்றாகச் செயல்படுவதில் அனுபவம் நீண்ட தூரம் கைகொடுக்கும்” என்று கூறி இருக்கிறார்.
தென் ஆப்பிரிக்கா சூழ்நிலைகள் மற்றும் அவரது தற்போதைய நிலை குறித்து அவர் நிறைவாகப் பேசும்போது “தென் ஆப்பிரிக்காவில் கூட, அத்தகைய சூழ்நிலைகள் புவனேஷ்வர் குமாருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். என்னை கேட்டால், அவரது சமீபத்திய பார்ம் மற்றும் அவர் பந்துவீசும் விதம் ஆகியவற்றால் அவர் அணிக்குள் வேலை செய்து வந்துள்ளார். நான் ரொம்ப தூரம் பார்க்கவில்லை; குறைந்தபட்சம் அடுத்த ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு, புவனேஷ்வருக்கு இன்னும் போதுமான தகுதி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.