ஐபிஎல் 2027 தொடரை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அணி நிர்வாகம் மற்றும் வீரர்களின் மட்டத்தில் நடக்கும் இந்த மாற்றங்கள் குறித்த தகவல்களை கிரிக்கெட் விமர்சகர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “ஸ்போர்ட்ஸ் தாக் தளத்தில் நான் இதை படித்தேன், அவர்கள் சில சரிபார்ப்புகளை செய்திருப்பார்கள் என்பதால் இது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதன் மூலம் ஏதோ ஒரு பேச்சுவார்த்தை நடப்பது தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவுடன் ஒரு குறுகிய கால ஏற்பாட்டிற்கு மீண்டும் செல்லலாமா என்று மறுபரிசீலனை செய்து வருகிறது” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து அவர் தனது கருத்தை ஆழமாக விளக்கும்போது “ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், கேப்டனாக ரோஹித் சர்மா எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவர் என்ன கொண்டு வருவார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது நிலவுக்கு கண்ணாடியைக் காட்டுவது போன்றது. அவர் ஐந்து டிராபிக்களை வென்ற கேப்டன். அவரால் என்ன செய்ய முடியும் என்று அவர் நிரூபிக்க வேண்டியதில்லை. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அந்த கண்ணோட்டத்தில் பார்க்குமா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.
மேலும் ஹார்திக் பாண்டியா குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “ஹார்திக் பாண்டியா கேப்டனாக நீடிக்க மாட்டார் என்பதை நாம் புரிந்து கொண்ட ஒரு விஷயம். அவர் மூன்று ஆண்டுகள் அந்த வேலையைச் செய்தார், ஆனால் இரண்டு ஆண்டுகள் மிகச் சாதாரணமானதாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தங்களை திருத்திக் கொள்ளும், அதனால்தான் அவர்கள் ஒரு வெற்றிகரமான டீம்” என்று கூறி இருக்கிறார்.
அடுத்தகட்ட கேப்டன்சி வாய்ப்புகள் குறித்து அவர் மேலும் பேசும்போது “ரோஹித் சர்மா சிறந்த ஆப்ஷனா? இந்த அணியில் பல கேப்டன்கள் உள்ளனர். உலகக்கோப்பை வென்ற கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருக்கிறார், அவர் வேறு எந்த கிரிக்கெட்டும் விளையாடவில்லை, அதாவது கேப்டனாக முழு கவனத்துடன் இந்த அணிக்கு சேவை செய்ய முடியும். எனவே, அவர் ஒரு கேண்டிடேட். பணிச்சுமை மேனேஜ்மென்ட் கண்ணோட்டத்தில் நீங்கள் அதிகம் யோசிக்கவில்லை என்றால், ஜஸ்பிரித் பும்ரா வடிவில் மற்றொரு கேண்டிடேட் இருக்கிறார். திலக் வர்மாவை மூன்றாவது ஆப்ஷனாக நான் பார்க்கிறேன். அவர் ஏற்கனவே டி20 பார்மட்டில் இந்தியாவின் வைஸ் கேப்டனாக மாறிவிட்டார், எதிர்காலத்தில் அவர் ஒரு ஐபிஎல் அணியை வழிநடத்துவார் என்பதில் சந்தேகமில்லை, மும்பை இதுபோன்று பலமுறை கேப்டன்களை உருவாக்குகிறது. எனவே, மூன்று ஆப்ஷன்கள் தெளிவாக உள்ளன” என்று கூறி இருக்கிறார்.