விராட் கோலிக்கு மட்டுமே பிளான் பண்ணல.. வெள்ளிக்கிழமை அதை செஞ்சுடுவோம்.. மொத்த திட்டம் இருக்கு – நாதன் வயன் பேட்டி

0
157
Lyon

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலிக்கு மட்டுமே தாங்கள் திட்டம் தீட்டவில்லை எனவும் ஒட்டுமொத்த இந்திய அணி பேட்ஸ்மன்களுக்கு எதிராகவும் தங்களிடம் திட்டமிருப்பதாகவும் ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. போட்டிக்கு நாட்கள் நெருங்க நெருங்க ரசிகர்களுக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்புகள் பெருகி வருகிறது. மேலும் முன்னாள் வீரர்கள் மற்றும் இந்நாள் வீரர்கள் தொடர் குறித்து தங்களுடைய கருத்துக்களை பகிர்வது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கிறது.

- Advertisement -

வெளிக்காட்டிக் கொள்ளாத ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணி இந்தியாவிடம் தொடர்ந்து தங்களது சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. இதை அவர்கள் மிகவும் மோசமாக உணர்கிறார்கள். ஆனால் இதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் பெரிய அளவில் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் இந்த முறை சொந்த மண்ணில் வைத்து இந்திய அணியை வெல்வதற்கு எல்லா வகையிலும் அவர்கள் தயாராகி வருகிறார்கள்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு பெரிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியையே பெர்த் அதிவேக மைதானத்தில் நடத்துகிறார்கள். ஆஸ்திரேலியா கோடை காலத்தில் இந்த மைதானத்தில் ஒரு டெஸ்ட் தொடர் துவங்குவது கிரிக்கெட் வல்லுனர்களுக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. இப்படி அட்டவணை தயாரிப்பதிலேயே இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் வேலை செய்து வருகிறது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை வந்து செய்வோம்

இந்த நிலையில் திட்டங்கள் குறித்து பேசிய நாதன் லயன் கூறும் பொழுது “எங்களிடம் விராட் கோலிக்கு மட்டுமே திட்டம் கிடையாது. எல்லா இந்திய பேட்ஸ்மேன்களுக்குமே நாங்கள் தனி தனி திட்டங்கள் வைத்திருக்கிறோம். இந்திய அணி சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன்கள் நிறைந்த ஒரு அணி. இது எங்களுக்கு உற்சாகமானது மேலும் சவாலானது. நாங்கள் இதற்கென சில திட்டங்களை கொண்டு வருவோம். எங்கள்உறுதியாக இருப்பதை அடுத்த இரண்டு நாட்களில் உறுதி செய்து மகிழ்ச்சி அடைவோம். வெள்ளிக்கிழமை அதை கொண்டு வந்து செயல்படுத்துவோம்”

இதையும் படிங்க : 2023 தப்பு திரும்ப வேண்டாம்.. அஸ்வினை விளையாட வையுங்க.. முக்கிய காரணம் இதுதான் – கங்குலி கோரிக்கை

“இந்த முறை ஆஸ்திரேலியா பக்கம் அதிக ஆதரவு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மைதானத்தில் நல்ல சத்தமாக அட்மாஸ்பியர் அருமையாக இருக்கும். மேலும் இந்திய அணி என்ன மாதிரியான திறமையை கொண்டு வருகிறது என்று எங்களுக்கு தெரியும். எனவே இந்த தொடர் எங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -