ஆஸி 450/2 ரன்கள் அடிக்கும்.. இந்தியா 65 ரன்களில் சுருட்டுவோம்.. உலக கோப்பை பைனல் குறித்து ஆஸி வீரர் கணிப்பு

0
16634

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதி போட்டியில் இந்தியாவை 65 ரன்களில் சுருட்டுவோம் என்று ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஸ் பேசியிருப்பது இந்திய ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது.

தற்போது மிச்செல் மார்ஸ் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இதில் இம்முறை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியில் மோதும் என மிச்செல் மார்ஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதில் முதலில் பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட்டுகளை இழந்து 450 ரன்கள் அடிக்கும் என்றும், இரண்டாவது பேட்டிங் செய்யும் இந்திய அணி 65 ரன்கள் மட்டுமே அடிக்கும் என மிட்செல் மார்ஷ் கூறியிருக்கிறார். இதன் மூலம் இந்தியா  385 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்துவோம் என்று மிச்சல் மார்ஸ் கணித்துள்ளார்.

ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் இது போன்று தான் தோற்கடித்திருக்கிறது. 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 359 ரன்களை குவித்தது.

இதில் கேப்டன் ரிக்கி பாண்டிங் 121 பந்துகளில் 140 ரன்களும், டேமியன் மார்ட்டின் 88 ரன்களும் குவித்திருந்தார்கள். இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 234 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதில் அதிகபட்சமாக சேவாக் மட்டும் 82 ரன்கள் குவிக்க ராகுல் டிராவிட் 47 ரன்கள் சேர்த்தார்.

- Advertisement -

கிட்டத்தட்ட இந்த ஸ்கோரை குறிக்கும் விதமாக மிச்சல் மார்ஸ் பேசியிருக்கிறார். இந்த பேட்டியை மார்ஷ் காமெடியாக சொன்னாலும் அது இந்திய ரசிகர்களை வெறுப்படைய செய்திருக்கிறது. மிட்செல் மார்ஷ்  கனவில் தான் இது போன்று நடக்கும் என்றும் இதற்கு தக்க பதிலடியை இந்திய வீரர்கள் களத்தில் கொடுப்பார்கள் என்றும் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணி 1987,99, 2003, 2007, 2015 என ஐந்து முறை உலக கோப்பையை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இம்முறையும் ஆஸ்திரேலியா அணி பலமாக இருப்பதால் உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது .