ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக்கின் தற்போதைய சிறந்த ஐந்து டி20 வீரர்கள்!

0
6282
Mark Waugh

கண்ணைப் பறிக்கும் அனாயச ஷாட்கள் விளையாடுவதில் வல்லவர் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக். ஆஸ்திரேலிய அணியின் மதிப்புமிக்க வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய ஸ்டீவ் வாக்கின் சகோதரர் இவர். 1988 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமாகி 2002ஆம் ஆண்டு வரை விளையாடினார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தலா 8 ஆயிரம் ரன்கள் அடித்து உள்ளார்.

இவர் தற்போது விளையாடி வரும் டி20 கிரிக்கெட் போட்டி வீரர்களில் தனது சிறந்த ஐந்து பேர் யார் என்று பட்டியலிட்டிருக்கிறார். அதில் மொத்தம் மூன்று பந்துவீச்சாளர்கள் அடுத்து இரண்டு பேட்ஸ்மேன்கள் இடம்பெற்று உள்ளார்கள். அவர்கள் யார் யார் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்!

- Advertisement -

ஜஸ்பிரித் பும்ரா இந்தியா :

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இன்று தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவரை மார்க் வாக் தேர்ந்தெடுப்பதற்கு காரணமாக, இவரால் எந்த நேரத்திலும் யாருடைய விக்கெட்டையும் எடுக்க முடியும் என்பதனால் இவரைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

ஷாகின் ஷா அப்ரிடி பாகிஸ்தான் :

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு காப்டன் இவர்தான். 22 வயதான இளம் வீரர் என்றாலும் இவரது வேகப்பந்து வீச்சு பல முன்னணி பேட்ஸ்மேன்களில் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது. இவரைப் பற்றி மார்க் வாக் கூறும்பொழுது ” இவரால் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை எந்த நேரத்திலும் உள்ளே கொண்டுவர முடியும். மேலும் இவர் வேகமாகவும் பந்தை வீசுகிறார். இதனால் தான் இவரை இரண்டாவது இடத்தில் வைத்திருக்கிறேன் ” என்று கூறியிருக்கிறார்.

ரஷித் கான் ஆப்கானிஸ்தான் :

மார்க் வாக் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருப்பவர் உலகின் தலைசிறந்த டி20 சுழற்பந்துவீச்சாளர் ரசித் கான். இவரைப் பற்றி மார்க் வாக் கூறும் பொழுது ” இவரால் இரண்டு மூன்று விக்கெட்டுகளை 20 ரன்களுக்குள் எடுக்க முடியும். மேலும் இவரால் பேட் செய்யவும் முடியும். இவரால் பந்தை எல்லைக் கோட்டைத் தாண்டி அடிக்க முடியும். அதனால் இவர் என்னுடைய விருப்பத்தில் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

ஜோஸ் பட்லர் இங்கிலாந்து :

தற்போதைய இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனான ஜோஸ் பட்லர் மார்க் வாக் தேர்வு செய்த ஐவரில் முதல் பேட்ஸ்மேனாக வருகிறார். இவரைத் தேர்ந்தெடுத்ததிற்கான காரணத்தை பற்றி மார்க் வாக் கூறும்பொழுது ” அனேகமாக தற்போதைய டி20 கிரிக்கெட் வடிவத்தில் அவர்தான் உலகின் நம்பர்-1 பேட்ஸ்மேன் என்று நினைக்கிறேன். அவர் பந்தை அடிப்பதில் ஒரு கிளீன் ஸ்டிரைக்கர்” என்று கூறியுள்ளார்.

கிளன் மேக்ஸ்வெல் ஆத்திரேலியா :

ஆஸ்திரேலிய அணியின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் மிடில் வரிசையின் தூணாக இருக்கும் கிளன் மேக்ஸ்வெல் மார்க் வாக் தேர்ந்தெடுப்பில் ஐந்தாவது இடத்தில் வருகிறார். இவரைத் தேர்ந்தெடுத்ததுதற்கான காரணத்தை பற்றி மார்க் வாக் கூறும் பொழுது ” இவர் 30 பந்துகளை சந்தித்தால் தனியாக ஆட்டத்தை வெல்வார். இவர் ஒரு நிலையான ஆட்டக்காரர் கிடையாது. ஆனால் நிலைத்து விட்டால் ஆட்டத்தை வென்று விடுவார். அதனால் இவர் ஒரு எக்ஸ் ஃபேக்டர் என்பதால் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்!