இந்தியா ODI சீரிஸ்.. விலகிய ஆஸி நட்சத்திர வீரர்.. அதிர்ஷ்ட வீரருக்கு இடம்.. காயத்தால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலியா

0
132
Green

இந்திய அணிக்கு எதிராக நாளை மறுநாள் தொடங்க இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நட்சத்திர ஆஸ்திரேலியா வீரர் விலகி இருக்கிறார். இவருடைய இடத்திற்கு அதிர்ஷ்ட வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

தற்போது இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெறும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி நாளை மறுநாள் பெர்த் மைதானத்தில் துவங்க இருக்கிறது.

- Advertisement -

நட்சத்திர வீரர் விலகல்

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் உடலின் பக்கவாட்டு காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறி இருக்கிறார். மேலும் அவர் ஆசஸ் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் மற்ற வீரர்களின் காயம் காரணமாக தொடர்ந்து வாய்ப்பு பெற்று வரும் அதிர்ஷ்ட வீரரான மார்னஸ் லபுசேனுக்கு இந்த முறையும் கேமரூன் கிரீன் காயத்தால் இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஸ்மித் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

காயத்தால் அவதிப்படும் ஆஸ்திரேலியா

தற்போது ஆஸ்திரேலியா அணி காயத்தாலும் வீரர்கள் தனிப்பட்ட முறையில் விலகுவதாலும் இந்திய அணிக்கு எதிரான தொடரில் கடுமையான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் காயம் காரணமாக ஜோஸ் இங்கிலீஷ் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலை காரணமாக ஆடர் ஜாம்பா ஆகியோர் விலகி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஹர்ஷித் ராணாவை தனிப்பட்ட முறையில் தாக்க கூடாது.. திடீரென ஆதரவாக பேசிய அஸ்வின் – என்ன நடந்தது?

ஆஸ்திரேலியாவில் நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருப்பதால் அந்த அணி கடுமையான நெருக்கடிக்கு உண்டாகி இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி திரும்பி வந்திருப்பது பலமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -