ஹர்ஷித் ராணாவை தனிப்பட்ட முறையில் தாக்க கூடாது.. திடீரென ஆதரவாக பேசிய அஸ்வின் – என்ன நடந்தது?

0
27
Rana

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனிப்பட்ட முறையில் ஹர்ஷித் ராணாவை யாரும் தாக்கி பேசக்கூடாது என்று திடீரென பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹர்ஷித் ராணா நான் வீசிய சிறப்பான ஒரு பந்தின் காரணமாகவே அவருக்கு இன்று வரை இந்திய அணியில் இடம் கிடைக்கிறது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து கம்பீர் ஹர்ஷித் ராணாவை குறி வைப்பது வெட்கக்கேடானது, அது மோசமான மனநிலை என கடுமையான முறையில் பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மறைமுகமாக பதில் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

அவர் மனம் உடைந்து போவார்

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” எந்த ஒரு வீரரையும் தனிப்பட்ட முறையில் தாக்க கூடாது என நான் எப்பொழுதும் கூறி வருகிறேன். தாக்குதல் தனிப்பட்ட முறையில் மாறும் பொழுது அதனுடைய வகை மாறுகிறது. என் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் என்னை விமர்சனம் செய்த சஞ்சய் மன்சரேக்கர் மீது நான் எப்பொழுதும் வெறுப்பு கொண்டது இல்லை. அவர்களின் விமர்சனம் சரி தவறாக இருக்கலாம். ஆனால் அது தனிப்பட்ட முறையில் மாறாத வரையில் பிரச்சனை இல்லை”

“ஹர்ஷித் ராணா தன்னை கடுமையாக விமர்சிக்கும் ஒரு ரீல்சை பார்த்துவிட்டு விளையாட போகிறார் என்றால் அது அவரை பாதிக்காதா? இதை பார்த்து அவர் உடைந்து போக மாட்டாரா? அவருடைய பெற்றோரும் நண்பர்களும் இதை பார்த்தால் உடைந்து போக மாட்டார்களா? அவருடைய கிரிக்கெட்டை நாம் விமர்சனம் செய்ய முடியும். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்ய முடியாது”

- Advertisement -

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாது

“இதை ஒன்று அல்லது இரண்டு முறை நாம் வேடிக்கை பார்க்கலாம். ஆனால் தொடர்ச்சியாக நடக்கும் பொழுது நாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இப்பொழுது நெகட்டிவாக பேசுவதை பார்ப்பதற்கு ஒரு பார்வையாளர் கூட்டம் உருவாகி இருக்கிறது. இதை வைத்து சிலர் அவர்களுக்கு தேவையானதை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் இதை தவிர்க்க வேண்டும்”

இதையும் படிங்க : ஒவ்வொரு கண்ணிலும் கண்ணீர் வரணும்.. விராட் ரோஹித் ஓய்வு குறித்து இந்திய முன்னாள் வீரர்

“எல்லோரும் ஹர்ஷித் ராணாவை மொத்தமாக குறி வைக்கிறார்கள். நாளை அவர் சிறப்பாக ஒரு போட்டியில் விளையாடினால் இவர்கள் எல்லோரும் அவரை பாராட்டுவார்களா?” என்று கேட்டிருக்கிறார்.

- Advertisement -