விராட் தோனி ரோகித்.. இந்த மூணு பேரு கிட்ட இந்த மூணு விஷயம் எனக்கு வேணும் – நிதிஷ் குமார் விருப்பம்

0
74
Nitish

இந்திய அணியில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான நிதீஷ்குமார் ரெட்டி இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய அடையாளங்களான விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி இடமிருந்து சில விஷயங்களை எடுத்துக் கொள்ள விரும்புவதாக கூறியிருக்கிறார்.

கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமாகிச் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஹைதராபாத் அணி நிர்வாகம் மெகா ஏலத்திற்கு முன்பாக அவரை தக்கவைத்துக் கொண்டது. இந்த வருடம் 3 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவருக்கு சிறந்த இன்னிங்ஸ் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மூன்று பேரிடம் மூன்று விஷயங்கள்

இந்த நிலையில் நிதீஷ் குமார் ரெட்டி இந்திய அணியில் சில வீரர்களிடமிருந்து முக்கியமான சில விஷயங்களை எடுத்துக் கொள்ள விரும்புவதாகவும், மேலும் நட்சத்திர இந்திய வேகப் பந்துவீச்சாளர் எதிராக தான் விளையாட விரும்புவதாகவும், அவருக்கு எதிராக விளையாடி ரன்கள் எடுத்தால் அது மதிப்பு மிக்கதாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து நிதீஷ் குமார் பேசும்பொழுது “தோனியிடமிருந்து அவரது கேப்டன்ஷிப் திறமைகளை நான் பெற விரும்புகிறேன். விராட் கோலி இடம் இருந்து அவருடைய ஆற்றல் மற்றும் ஆக்ரோஷத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். மேலும் ரோகித் சர்மாவின் புல் ஷாட் எனக்கு வேண்டும். இந்த விஷயங்கள் எல்லாமே மிகச்சிறந்த விஷயங்கள்”

- Advertisement -

பும்ராவின் பந்துவீச்சில் ஆட வேண்டும்

“இந்திய கிரிக்கெட்டின் இந்த தலைமுறையானது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மூலமாக கட்டப்பட்டு இருக்கிறது. அவர்கள் இந்திய கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். அவர்களுடைய பாரம்பரியத்தை நாங்களும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். தற்போது பும்ரா, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய கிரிக்கெட்டின் தங்கங்கள்”

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. சாம்சன் ரூட் கிளேயர்.. பும்ராவுக்கு தொடரும் சிக்கல்.. எப்போது மும்பை அணிக்கு திரும்புவார்?

“பும்ராவுக்கு எதிராக விளையாடும் சவாலுக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். தற்போது உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவர். நான் அவருக்கு எதிராக விளையாடி சில ரன்கள் எடுத்தால் அதில் மகிழ்ச்சி அடைவேன். அவரைப் போன்ற ஒருவருக்கு எதிராக போட்டியிடுவதுதான் ஆட்டத்தை உற்சாகப்படுத்துகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -