இந்திய கிரிக்கெட் அணி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வேகப்பந்து வீச்சில் குறிப்பிடத்தக்க அணியாக முன்னேறி வருகிறது. குறிப்பாக மூன்று வடிவ தொடரிலும் இந்திய அணியில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் இளம் பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் தனக்குப் பிடித்த இந்திய பந்து வீச்சாளர் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி முதலில் வேத பந்துவீச்சை விட சுழற் பந்து வீற்றும் முக்கியத்துவம் கொடுத்து சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களை உருவாக்கியது. தற்போது நாளடைவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேகப்பந்து வீச்சின் முக்கியத்துவத்தை அறிந்த பின்னர் அதற்குத் தகுந்தவாறு பந்துவீச்சாளர்களை உருவாக்கும் விதமாக ஐபிஎல் மற்றும் இந்திய உள்நாட்டு தொடர்களில் சிறந்த பந்துவீச்சாளர்களை கண்டறிந்தது.
அந்த வகையில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளராக கருதப்படும் ஜாகிர் கானுக்கு பிறகு பிரவீன் குமார், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, முகமது சமி, என தற்போது உலகின் நம்பர் ஒன் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக கருதப்படும் பும்ரா வரை வேகப்பந்து வீச்சில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காகவும் இங்கிலாந்தில் நடைபெற்ற 100 தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சன் இன்விசிபிள் அணிக்காக விளையாடி மான்செஸ்டர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இந்த நிலையில் அவர் பும்ரா இந்திய கிரிக்கெட்டின் மூன்று தொடர்களிலும் அவர் ஒரு அச்சாணி என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “பும்ரா ஒரு நம்ப முடியாத பந்துவீச்சாளராக இருக்கிறார். அவர் டி20, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என மூன்று வடிவ தொடர்களுக்கும் ஒரு அச்சாணியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். நாங்கள் அவருக்கு எதிராக விளையாடி இருக்கிறோம். அவரை பார்க்கும் போது பயப்படும் வகையில் அவரது பந்து வீச்சு செயல் பாடு இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:134 ரன்.. ஆஸிக்கு எதிரா தென் ஆப்பிரிக்கா புதிய வரலாறு.. பைனலுக்கு தகுதி.. மகளிர் டி20 உலகக் கோப்பை
2024 ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட ஜான்சன் 10 கோடி ரூபாய்க்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார். இருப்பினும் அந்த சீசன் அவருக்கு சரியாக அமையவில்லை ஐந்து போட்டிகளில் விளையாடி 9.43 எக்காணமியில் நான்கு விக்கட்டுகள் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸ்திரேலியா டி20 அணியில் அறிமுகமாகி இருக்கும் நிலையில் ஐந்து போட்டிகளில் விளையாடி ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்