134 ரன்.. ஆஸிக்கு எதிரா தென் ஆப்பிரிக்கா புதிய வரலாறு.. பைனலுக்கு தகுதி.. மகளிர் டி20 உலகக் கோப்பை

0
509
SA

நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

வழக்கத்திற்கு மாறாக தடுமாறிய ஆஸ்திரேலியா

முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு துவக்க வீராங்கனை பெத் மூனி 42 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு தாகிலா மெக்ராத் 33 பந்தில் 27 ரன்கள், எல்லீஸ் பெரி 23 பந்தில் 31 ரன்கள், லிச்சிபீல்டு 9 பந்தில் 16 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

ஆச்சரியப்படுத்திய தென் ஆப்பிரிக்கா

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க வீராங்கனை தன்சிம் பிரிட்ஸ் 15 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து லாரா வால்வோர்ட் 37 பந்தில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடிய அன்னேகே போஸ்க் 48 பந்தில் எட்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் ஆட்டம் இழக்காமல் 74 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. மேலும் 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க: 162 ரன்.. கலக்கிய இலங்கை டாப் ஆர்டர்.. வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி.. தொடரையும் இழந்தது

இதுவரை 1999 முதல் நடைபெற்ற 7 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் 6 தொடர்களை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. மேலும் ஒரு முறை இறுதிப்போட்டிக்கு சென்று தோற்றது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத முதல் டி20 உலகக் கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -