ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பொதுவாக நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் காலகட்டமாக இருக்கும்.
இந்த சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர் குறித்து ஆஸ்திரேலியா அணி வீரரான பேட் கம்மின்ஸ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கருத்தில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் வசதிக்கேற்ப டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான கால அட்டவணையை அமைத்து பின்பற்றி வருகிறது. இதில் இதற்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டு இறுதிப் போட்டியிலும் இந்திய அணி இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியடைந்த நிலையில் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலிய அணியும் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் குறிப்பாக ஒரு முழு ஆண்டுக்கு நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களை நடத்துவது வழக்கம். இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரின் போது எந்த சர்வதேச தொடர்களும் அதில் குறிப்பிடக் கூடாது எனவும் ஐபிஎல் தொடருக்கு என்று எப்படி ஒரு நிலையான அட்டவணை வைத்திருப்பது போல் டெஸ்ட் கிரிக்கெட்க்கும் நிலையான அட்டவணை வைத்திருப்பது அவசியம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் கூறி இருக்கிறார்.
இது குறித்து பேட் கம்மின்ஸ் விரிவாக கூறும்பொழுது ” சில நாடுகளுக்கு பிரான்சிஸ் கிரிக்கெட் தொடர்கள், சர்வதேச கிரிக்கெட்டை விட அதிக லாபம் தரக்கூடிய வகையில் அமையும். மேலும் அது கவர்ச்சிகரமான ஒரு விளையாட்டை உருவாக்கும். நான் பிரான்சிஸ் கிரிக்கெட் சென்று விளையாடினால் ஆஸ்திரேலியா அணியின் சம்பள பட்டியலில் இருந்து பாதியாகவோ அல்லது மூன்றில் ஒரு பங்குக்கு நான் விலகி இருக்க வேண்டி இருக்கும்.
ஆஸ்திரேலியாவை பொருத்தவரை நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கான காலகட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த சூழ்நிலையில் வேறு எந்தத் தொடர்களும் விளையாடப் போவதில்லை. ஐபிஎல்க்கு என்று குறிப்பிட்ட அட்டவணை இருப்பது போல டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அட்டவணை இருந்தால் அது வீரர்கள் முடிவெடுப்பதற்கான வேலையை எளிதாக்குகிறது.
இதையும் படிங்க:100 அடிச்ச பேட் என்னோடது இல்ல.. பிரஷர் மேட்ச் அவர்ட்ட தான் பேட் கேப்பேன்.. அபிஷேக் சர்மா ருசிகர தகவல்
எனது தனிப்பட்ட கருத்தின் படி ஐபிஎல் தொடர் நடைபெறும் போது வேறு எந்த சர்வதேச தொடர்களும் நடைபெறக்கூடாது. இந்தத் தொடர் நீண்ட காலமாக ஒரே அட்டவணையில் நடைபெற்று வருகிறது. நிச்சயமாக உங்கள் முதல் அர்ப்பணிப்பு உலகக் கோப்பைக்காக சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதாக இருக்கலாம். அதில் மாற்று கருத்து இல்லை. அதனால் இதற்கு தகுந்தவாறு அட்டவணைகளை உருவாக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்” என கூறி இருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் டி20 உலக கோப்பைக்காக இங்கிலாந்து அணியின் 9 வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டை இறுதியில் புறக்கணித்துவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.






