ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய அபிஷேக் ஷர்மா பயன்படுத்திய பேட் அவருடையது இல்லை என சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த தொடரில் அறிமுகமான 23 வயதான அபிஷேக் சர்மா முதல் போட்டியில் எதிர்பாராத விதமாக டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் நேற்று இரண்டாவது போட்டியில் களமிறங்கிய நிலையில் தொடக்கத்தில் சிறிது நிதானமாக விளையாடி பின்னர் தனது வழக்கமான டாப் கியரில் ஆரம்பித்தார்.
33 பந்துகளில் அரை சதம் அடித்த அபிஷேக் சர்மா, தனது முதல் சதத்தை அடிக்க அடுத்த 13 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 46 பந்துகளில் தனது முதல் டி20 சர்வதேச சதத்தை பதிவு செய்தார். இதில் ஏழு பவுண்டரிகளும் மற்றும் 8 சிக்சர்களும் அடங்கும். இவரது அதிரடியால் 234 ரன்கள் குவித்த இந்திய அணி, பின்னர் தனது அபாரமான பந்துவீச்சால் 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை தோற்கடித்தது.
இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய அபிஷேக் ஷர்மா தான் அண்டர் 12 விளையாடும் காலகட்டத்தில் இருந்து அழுத்தமான சூழ்நிலைகளில் கில்லிடம் இருந்து தான் பேட் வாங்கி விளையாடுவதாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் விரிவாக கூறும் பொழுது “இது எனது 11-12 வயதில் இருந்தே இது போன்று தான் விளையாடி வருகிறேன். இது மிகவும் அழகான தருணம். கில்லுடன் நான் 12 வயதிலிருந்து விளையாடி வருகிறேன். நான் இந்திய அணிக்காக முதன் முதலில் தேர்வு செய்யப்பட்ட போது அணியின் கேப்டன் கில்லிடம் இருந்துதான் அழைத்து வந்தது.
நாங்கள் 12 வயதுக்குட்பட்டோருக்கான காலகட்டத்தில் இருந்து விளையாடும்போது அவரிடம் தான் பேட் வாங்குவேன். நான் எப்போதெல்லாம் சூழ்நிலைகளை அழுத்தமாக உணர்கிறேனோ அப்போதெல்லாம் அவரிடம் இருந்து பேட் வாங்குவது பழக்கம். இது இங்கு மட்டும் இல்லாமல் ஐபிஎல்லிலும் இது நடைபெறும். வழக்கத்தை போலவே அது இன்றைய ஆட்டத்திலும் எனக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது. யுவி பாஜி என் கிரிக்கெட் கிரியரில் முக்கியமான பங்காக இருந்துள்ளார்.
இதையும் படிங்க:40 பந்தில்.. 44 வயதான கிறிஸ் கெயில் ருத்ர தாண்டவம்.. வெஸ்ட் இண்டீஸ் சவுத் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸை வீழ்த்தியது
நான் எப்போதும் என்னை சிக்ஸர் கிங்காவோ அல்லது வேறு மாதிரியோ என்னை நினைத்துக் கொள்ள மாட்டேன். என்னை லாப்ட் ஷாட்கள் எனப்படும் தூக்கி அடித்து விளையாட அனுமதித்த என் அப்பாவுக்கு ஸ்பெஷல் நன்றி. பொதுவாக பயிற்ச்சியாளர்கள் எப்போதும் ஒரு இளம் வீரரை லாக் ஷாட்கள் விளையாட அனுமதிப்பதில்லை. அப்படி அதை விளையாடினால் அது எப்போதும் மைதானத்திற்கு வெளியே செல்ல வேண்டும் என்று என் அப்பா கூறுவார். இதனால் நான் அதையே பின்பற்றினேன்” என்று கூறி இருக்கிறார்.






