இவரோட விக்கெட்ட எடுத்துட்டா அவ்ளோதான்.. மக்கள் உங்கள சீக்கிரம் வெறுத்துருவாங்க – ஆஸி நாதன் லயன் பேட்டி

0
447

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்த பின்னர் வருகிற நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது குறித்து ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் லயன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த பத்து ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடரில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் ட்ராபி தொடரை வென்ற இந்திய அணி அதற்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும் வெற்றி பெற்று கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, பும்ரா, ரோஹித் சர்மா ஆகியோர் முக்கிய வீரர்களாக திகழ்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு பேட்டியில் இந்திய வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது என்பது ஒரு முழு நாட்டிற்கு எதிராக விளையாடுவது போன்ற உணர்வை கொடுக்கும் என்றும் விராட் கோலியின் விக்கட்டை வீழ்த்தினாலோ அல்லது விக்கெட் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கினாலோ நீங்கள் விரைவிலேயே உலக கிரிக்கெட் வெறுக்கப்படும் நபராக மாறுவீர்கள் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர் நாதன் லயன் கூறி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி குறித்து நாதன் லயன்

இதுகுறித்து நாதன் லயன் விரிவாக கூறும்போது “விராட் கோலி போன்ற ஒருவருக்கு நீங்கள் பந்து வீசும் போது உங்களுக்கு எதிராக முழு தேசமும் இருப்பது போன்ற உணர்வீர்கள். உங்களால் சிறிதளவு முயற்சி செய்து விராட் கோலி விக்கட்டை வீழ்த்தினாலோ அல்லது ஒரு வாய்ப்பை உருவாக்கினாலோ நீங்கள் விரைவாக உலக கிரிக்கெட்டில் விரைவில் வெறுக்கப்படும் நபராக மாறுவீர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசிய அனுபவம் எனக்கு இருந்தது.

இதையும் படிங்க:எவ்வளவு யோசிச்சாலும் பும்ராவை விட.. எங்க நசீம் ஷா தான் பெஸ்ட் பவுலர் – பாகிஸ்தான் இசானுல்லாஹ் பேட்டி

விராட் கோலி ஒரு சூப்பர் ஸ்டார் வீரர். பல ஆண்டுகளாக அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு எதிராக விளையாடுவது என்பது ஒரு பாக்கியமாகும். உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவதை நான் எப்போதும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளேன். அனேகமாக எல்லோரிடமிருந்தும் விராட் கோலி அந்த மிகப்பெரிய சவாலை கொண்டு வந்துள்ளார்” என்று கூறியிருக்கிறார். எனவே வருகிற டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் நாதன் லயன் ஆகியோருக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்று கூறலாம்.

- Advertisement -