இந்திய கிரிக்கெட்

விராட் கோலிக்கு எங்ககிட்ட இந்த திட்டம் இருக்கு.. அவர் இந்த தப்பதான் செய்யறாரு – ஸ்காட் போலண்ட் விளக்கம்

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தில் விராட் கோலி ஆட்டம் இழந்தது குறித்து அவரை வெளியேற்றிய ஸ்காட் போலன்ட் பேசியிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஒரே முறையில் இதுவரையில் தொடர்ந்து ஆட்டம் இழந்து வருகிறார். இது இந்திய அணி நிர்வாகம் மற்றும் இந்திய அணி ரசிகர்களை பெரிய அளவுக்கு ஏமாற்றப்படுத்தி இருப்பதோடு வெறுப்புக்கும் உள்ளாகி இருக்கிறது.

மிகவும் சீரியஸான பிரச்சனை

இந்த பிரச்சனைக்கு விராட் கோலி ஆரம்பத்தில் சில பந்துகளை விட்டு விளையாடி செட்டில் ஆனால் சரியாகிவிடும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வந்தார்கள். கடந்த இரண்டு டெஸ்ட்களிலும் ஆரம்பத்தில் விராட் கோலி இப்படியான பந்துகளை விட்டு விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருந்த பொழுதிலும் கூட விராட் கோலி வெளியில் செல்லும் பந்தை எந்த நேரத்தில் விளையாடினாலும் ஆட்டமிழக்கும் சூழ்நிலையில் இருக்கிறார். அவருக்கு அந்தப் பந்தை விளையாடுவதில் 100% இருக்கிறது. இதன் காரணமாக அவர் மன ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் அப்படியான பந்தை விளையாட மீண்டும் தயாராக வேண்டியதாக இருக்கிறது. இது இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்தமாகவே பிரச்சனையாக மாறியிருக்கிறது.

- Advertisement -

ஸ்காட் போலன்ட் வந்த விளக்கம்

இதுகுறித்து ஸ்காட் போலன்ட் கூறும்பொழுது ” விராட் கோலியை ஆட்டோ இழக்கு செய்வது குறித்து எங்களிடம் சில நல்ல திட்டங்கள் இருக்கிறது. அவர் இதற்காக பந்தை விட்டு விளையாடுகிறார். ஆனால் அவர் எப்பொழுது பந்தை விளையாட சென்றாலும் அந்தப் பந்தில் ஆட்டம் இழக்கிறார். மேலும் அவர் உள்ளே வந்தவுடன் விளையாட விரும்புகிறார். எனவே நாங்கள் உடனுக்குடன் எங்கள் திட்டங்களை மாற்றிக் கொள்கிறோம். ஐந்தாவது ஸ்டெம்ப் லைனில் நாங்கள் வீசும் போது கொஞ்சம் கொஞ்சமாக அது எங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : 9 ரன் 5 விக்கெட்.. வருண் மேஜிக் பவுலிங்.. சிஎஸ்கே விஜய் சங்கர் அபாரம்.. தமிழ்நாடு அணி பிரம்மாண்ட வெற்றி.. விஜய் ஹசாரே டிராபி 2025

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “விராட் கோலியே இப்படி ஆட்டம் இழப்பதில் ஏமாற்றம் அடைவார் என்று நான் நினைக்கிறேன். அவர் பிரண்ட் புட்டில் விளையாட நினைக்கிறார். ஆனால் அவர் பேக் போட்டியில் விளையாடும் பொழுது, இப்படியான பந்துக்கும் அவருக்கும் ஒன்று அல்லது ஒன்றரை அடி தூரம் இருக்கும். எனவே அவருக்கு இப்படி பந்து எட்ஜ் ஆகாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts