2023WCபோலவே.. U19 உலககோப்பை பைனலிலும் வித்தியாச முடிவெடுத்த ஆஸி.. தொடரும் பாரம்பரியம்

0
210
Australia

இன்று தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன.

அண்டர் 19 உலககோப்பை தொடரில் இதுவரை இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மூன்று முறை சந்தித்திருக்கின்றன. அதிகபட்சமாக இந்திய அணி இரண்டு முறை வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

மேலும் அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் 2000ம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வென்றது கிடையாது. மேலும் இந்திய அணி ஐந்து முறை கோப்பையை வென்று முதல் இடத்தில் இருக்கிறது.

கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை உடைத்து இருந்தது.

அந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்றிருந்த ஆஸ்திரேலியா அணி யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கருப்பு மண் ஆடுகளத்தை புரிந்து, மேலும் இரவில் கொஞ்சம் இருக்கும் பனிப்பொழிவையும் வைத்து, அவர்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்கள். அந்த நேரத்தில் எல்லோருமே முதலில் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று போட்டி நடைபெறும் மைதானத்தில் புள்ளி விபரங்களின்படி முதலில் டாஸ் வென்றால் பந்து வீசுவது தான் சிறந்ததாக இருக்கிறது. அரை இறுதியில் கூட இதே மைதானத்தில் முதலில் பந்து வீசிய அணிகளே வெற்றி பெற்று இருக்கின்றன. மேலும் கொஞ்சம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மேகமூட்டம் காணப்படுகிறது.

இதையும் படிங்க : “தம்பிங்களா விட்றாதிங்க.. எதிர்காலத்துக்காக செய்ங்க” – U19 இந்திய அணிக்கு யுவராஜ் சிங் வாழ்த்து

ஆனால் இன்றும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அனைவரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இறுதிப் போட்டியின் அழுத்தத்தை பயன்படுத்த, முதலில் இலக்கில்லாமல் பேட்டிங் செய்து, இந்தியாவிற்கு இலக்கின் அழுத்தத்தை கொடுப்பதற்காக ஆஸ்திரேலியா இப்படி முடிவு செய்திருப்பதாக கருதப்படுகிறது.