இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஸ்லி கார்டர்னர் பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் வீராங்கனையாக அசத்தல் சாதனையை படைத்திருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து பெண்கள் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்லி கார்டர்னர் முதல் சாதனை
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனைகள் லிட்ச்ஃபீல்டு 15, கேப்டன் அலேசா ஹீலி 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து வந்த நட்சத்திர வீராங்கனை எல்லிஸ் பெரி இரண்டு ரன் மட்டும் எடுத்து வெளியேறினார்.
இதற்கு அடுத்து பெத் மூனி சமாளித்து விளையாடி 62 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். தாகிலா மெக்ராத் அதிரடியாக 45 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் வந்த ஆஸ்லி கார்டர்னர் 102 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் உடன் 102 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. மேலும் ஆஸ்லி கார்டர்னர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்து சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
அலனா கிங் அசத்தல் பந்துவீச்சு
இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீராங்கனை பிமெண்ட் 77 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து நாட் சிவியர் ப்ரண்ட் 68 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. பிசிசிஐ மாஸ் ஏற்பாடு.. நட்சத்திர வீரர்களுக்கு சிக்கல்.. சிறப்பான நகர்வு
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சில் லெக் ஸ்பின்னர் அலனா கிங் எட்டு புள்ளி இரண்டு ஓவர்கள் பந்து வீசி 46 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அடுத்து மேகன் ஸ்கட் ஒன்பது ஓவர்கள் பந்து வீசி 57 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா பெண்கள் அணி மகளிர் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணியாக இருந்து வருகிறது!






